சென்னை: பிரதமர் மோடியின் ரூபாய் நோட்டு அறிவிப்பை எதிர்த்து தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை நாளை மறுநாள் கடையடைப்புக்கு அழைப்புவிடுத்துள்ளது.
த.வெள்ளையன் தலைமையில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை நிர்வாகிகள் கூட்டம் புரசைவாக்கத்தில் நடைபெற்றது பொதுச் செயலாளர் கே.தேவராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
500, 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என மத்திய அரசு அறிவித்துள்ளதால் சில்லரை வணிகர்கள் பாதிக்கப்படுவது குறித்து இதில் விரிவாக ஆலோசிக்கப்பட்டது. ஆலோசனை முடிவில், மத்திய அரசை கண்டிக்கும் விதமாக நாளை மறுநாள் திங்கள்கிழமை தமிழகம் முழுவதும் கடையடைப்பு நடத்துவது என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
இதுகுறித்து வணிகர் சங்க பேரவை தலைவர் த.வெள்ளையன் பின்னர் நிருபர்களிடம் கூறியதாவது: ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்ற பிரதமர் மோடியின் அறிவிப்பு சாமானிய மக்கள் கைகளில் பண நடமாட்டம் இருக்கக் கூடாது, சில்லரை வணிகர்களின் கடைகளில் வியாபாரம் நடக்கக் கூடாது என்கின்ற உள் நோக்கம் கொண்டது.
ஆன்லைன் வணிகத்தை நோக்கி மக்களைத் திருப்பும் மோசடித் திட்டம். வணிகர் சங்க பேரவை சார்பில் ஏற்கனவே தமிழகமெங்கும் அனைத்து மாவட்டங்களிலும் ஆர்ப்பாட்டம் நடத்தி எங்கள் எதிர்ப்பைத் தெரிவித்தோம். ஆனால், வணிகர்கள் மற்றும் மக்களின் உணர்வுகளை மத்திய அரசு மதிக்கவில்லை.
உள்நாட்டு சில்லரை வணிகத்தை அழிக்கச் செய்யப்பட்டிருக்கும் இந்த மோசடியை எதிர்த்து கம்யூனிஸ்டு கட்சிகள் போராட்டங்கள் அறிவித்து உள்ளன. இந்த போராட்டங்களுக்கு வணிகர்களின் ஆதரவை தெரிவிக்கும் விதத்தில் நாளை மறுநாள் திங்கட்கிழமை தமிழகம் முழுவதும் முழு கடை அடைப்பு செய்வது என்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை முடிவெடுத்திருக்கின்றது. தமிழகம் முழுவதும் 50 லட்சத்திற்கும் மேற்பட்ட வணிகர்கள் இந்த கடையடைப்பில் பங்கேற்பார்கள்.
English summary:
Tamilnadu traders association will be on strike on November 28, Monday, to oppose demonestitation.