வைகை அணையின் நீர்மட்டம் வெகுவாக குறைந்துள்ளதால், தேனி உட்பட 5 மாவட்டங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது.
பருவமழை பொய்த்து போனதால் தேனி மாவட்டத்தில் உள்ள வைகை அணையின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது. கடந்த 15 ஆண்டுகளில் இல்லாத வகையில், அணையின் நீர்மட்டம் தற்போது 21 அடியாக குறைந்து விட்டது.
வைகை அணையின் நீர் ஆதாரமாக விளங்கும் வைகை ஆறும், வறண்டு காணப்படுவதால், மதுரை, திண்டுக்கல், தேனி உள்ளிட்ட 5 மாவட்ட மக்களின் குடிநீர் கேள்விக்குறியாகி உள்ளது. வைகை அணையில் 15 முதல் 20 அடி வரையில் வண்டல் மண் படிந்துள்ள நிலையில், தற்போது இருக்கும் தண்ணீரின் மூலம் இன்னும் 20 நாட்களுக்கு மட்டுமே குடிநீர் வினியோகம் செய்யமுடியும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.