மும்பை: ரூபாய் நோட்டு வாபஸ் பெறப்பட்டதை தொடர்ந்து பல விமான நிலையங்களில் நடந்த சோதனையில் பணம் மற்றும் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதன் மதிப்பு ரூ.5 கோடி என அதிகாரிகள் தெரியவந்துள்ளது.
கண்காணிப்பு:
கறுப்பு பணத்தை வெளிக்கொண்டு வரவும், கள்ள நோட்டுக்களை ஒழிக்கவும் ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுக்கள் வாபஸ் பெறப்பட்டது. இதற்கு பதில் புதிய நோட்டுக்களை வங்கிகளில் பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து விமான நிலையங்கள், ரயில்நிலையங்கள், மெட்ரோ ரயில் ஸ்டேசன்கள் உள்ளிட்ட இடங்களில் வாபஸ் பெறப்பட்ட பணம் மற்றும் நகைகள் குறித்து கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தும்படி போலீசார் மற்றும் துணை ராணுவப்படையினருக்கு மத்திய நிதியமைச்சகம் உத்தரவிட்டது. இதனையடுத்து சி.ஐ.எஸ்.எப்., பாதுகாப்பில் உள்ள 59 விமான நிலையங்கள் மற்றும் டில்லி மெட்ரோ ரயில் நிலையத்தில் தீவிர பாதுகாப்பு பணி மேற்கொள்ளப்பட்டது.
ஒப்படைப்பு:
டில்லி, மும்பை, கோல்கட்டா மற்றும் கவுகாத்தி விமான நிலையங்களில், கடந்த 10ம் தேதி முதல் சோதனை செய்யப்பட்டதில் பணம் மற்றும் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இங்கு சி.ஐ.எஸ்.எப்., மற்றும் வருமான வரித்துறையினரின் உளவுத்துறை பிரிவு கண்காணிப்பில் ஈடுபட்டதுடன் சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையில் 15.62 கிலோ தங்கம், வாபஸ் பெறப்பட்ட 500 மற்றும் 1000 நோட்டுக்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. இதன் மதிப்பு ரூ.5 கோடியாகும். பறிமுதல் செய்யப்பட்ட பணம் மற்றும் நகைகள் அனைத்தும் வருமான வரித்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

English Summary:
The rupee note was withdrawn following a raid at a number of airports in the money and jewelry were seized. Its worth Rs 5 crore, officials said.