ராமநாதபுரம்: ராமநாதபுரம் நேரு நகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் கடல் அட்டை பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக வனச்சரகர் கணேசலிங்கத்திற்கு நேற்று தகவல் கிடைத்தது.
சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறை அதிகாரிகள் அங்கு சபரிராஜன் என்பவரின் வீட்டை சோதனை செய்தனர். வீட்டில் 420 கிலோ கடல் அட்டைகள் இருந்தது தெரியவந்தது. இதன் சர்வதேச மதிப்பு ₹60 லட்சம். கடல் அட்டையை பறிமுதல் செய்த வனத்துறையினர் சபரிராஜனை கைது செய்தனர்.