உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை அருகே கார் மீது லாரி மோதி விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னை பெருங்களத்தூரைச் சேர்ந்த சுந்தரம் என்பவர், தனியார் பொறியியல் கல்லூரியில் மேலாளராக பணியாற்றி வந்தார். தனது மகனுக்கு தஞ்சை மாவட்டம் கருப்பூரில் நிச்சியதார்த்தம் செய்துவிட்டு திருச்சி வழியாக காரில் சென்னை திரும்பிக் கொண்டிருந்தார். அதிகாலை 1 மணியளவில் உளுந்தூர்பேட்டை ஆசனூர் அருகே கார் வந்த போது, திருச்சியை நோக்கி வந்த லாரி கார் மீது மோதியது.
இதில் காரில் இருந்த சுந்தரம், சுசிலா, பத்மா, ஆகாஷ், பாப்பாத்தி ஆகிய 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். காரை ஓட்டி வந்த ராமசந்திரன் உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
உயிரிழந்த 6 பேரின் உடல்களும் உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளன. விபத்தால் சென்னை - திருச்சி நெடுஞ்சாலையில் 2 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்து குறித்து இடைக்கல் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.