மபுடோ: கிழக்கு ஆப்பிரிக்காவின் மொசம்பிக் நாட்டில் எரிபொருள் டேங்கர் லாரி வெடித்து விபத்துக்குள்ளானதில் 70 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
கிழக்கு ஆப்பிரிக்காவின் அரபிக் கடலை ஒட்டியுள்ள நாடு மொசம்பிக். இந்நாட்டில் எரிபொருள் டேங்கர் லாரி வெடித்து விபத்துக்குள்ளானது. இதில் 73 பேர் உயிரிழந்ததாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நூற்றுக்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்துள்ளனர். உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது. காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மலாவி நாட்டின் எல்லையில் உள்ள டெடி மாகாணத்தில் இந்த விபத்து ஏற்பட்டது. கடற்கரை பகுதியில் இருந்து பெட்ரோல் ஏற்றிக் கொண்டு சென்ற டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்திற்குள்ளாகி உள்ளது. தலைகீழாக கவிழ்ந்த லாரியில் இருந்து மக்கள் பெட்ரோலை பிடித்துக் கொண்டு சென்று கொண்டிருந்தனர். அப்போது திடீரென டேங்கர் லாரி வெடித்ததால் இந்த துயர சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது.
English Summary:
East Africa's Mozambique country exploding fuel tanker truck crashed, killing 70 people miserable.