சென்னை : தமிழகம் முழுவதும் உள்ள வீடுகளுக்கு முதல் 100 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கியதால் 78.55 லட்சம் பேர் மின் கட்டணம் செலுத்துவதில்லை என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
தமிழக அரசு தகவல் :
தமிழக மக்கள் வீடுகளில், இரண்டு மாதங்களில் பயன்படுத்தப்படும் மின்சாரத்தில் முதல் 100 யூனிட் அளவிற்கு கட்டணமில்லை என்ற அறிவிப்பை கடந்த மே மாதம் 23 ம் தேதி முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டார். இதனைத் தொடர்ந்து இந்த அறிவிப்பின் மூலம், தற்போது 190.90 லட்சம் குடியிருப்பு மின்நுகர்வோர் பயன்பெறுவதாக தமிழக அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, 100 யூனிட் மட்டுமே மின்சாரம் பயன்படுத்தும் 78.55 லட்சம் பேர் மின்கட்டணமே செலுத்துவதில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைத்தறி நெசவாளர்களுக்கு 100 யூனிட் இலவசம் என்ற மின்சார அளவை 200 யூனிட் என்று உயர்த்தியதன் மூலம் தற்போது 1 லட்சத்து 11 ஆயிரத்து 10 கைத்தறி நெசவாளர்கள் பலன் பெறுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல விசைத்தறி நெசவாளர்களுக்கு வழங்கப்படும் மின்சார அளவை 500 யூனிட்டிலிருந்து 750 யூனிட்டாக உயர்த்தியதன் மூலம் 98 ஆயிரத்து 712 நெசவாளர்களும் பயன்பெறுவதாகவும் அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary:
Tamil Nadu for the first 100 units of electricity to homes around the 78.55 lakh people Offering free ordered to pay the bills.