பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள வேந்தர் மூவீஸ் மதனை, 7 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க சைதாப்பேட்டை நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
மருத்துவப் படிப்புக்கு சீட் வாங்கி தருவதாக கூறி வேந்தர் மூவீஸ் மதன், பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து தலைமறைவாகி இருந்த மதனை, திருப்பூரில் போலீசார் கைது செய்தனர்.
தொடர்ந்து, மதனை 10 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி காவல்துறை சார்பில் சென்னை சைதாப்பேட்டை 11வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நேற்று மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை இன்று விசாரித்த நீதிமன்றம், மதனை வரும் 29ம் தேதி வரை 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க காவல்துறைக்கு அனுமதி வழங்கியுள்ளது.
மேலும் 48 மணி நேரத்துக்கு ஒரு முறை மதனின் உடலை பரிசோதனை செய்யவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மோசடி வழக்கு தொடர்பாக அவரிடம் தீவிர விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர்.
English Summary:
Chancellor, who was arrested on money-laundering case matanai movies, taking 7-day police custody authorizes the court to investigate the Saidapet