புதுடில்லி : கறுப்பு பணத்திற்கு எதிரான நடவடிக்கையாக ரூ.500, 1000 நோட்டுக்களை மத்திய அரசு வாபஸ் பெற்றதாக அறிவித்துள்ளதற்கு நாடு முழுவதிலும் உள்ள 80 சதவீதத்திற்கும் அதிகமான மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
கருத்து கணிப்பு :
இந்தியாவை தலைமையிடமாகக் கொண்ட சர்வதேச கருத்துக்கணிப்பு நிறுவனமான சி-வோட்டர், நவம்பர் 21 ம் தேதியன்று நாடு முழுவதும் கருத்துகணிப்பு ஒன்றை நடத்தியது. ரூ.500, 1000 நோட்டுக்கள் வாபஸ் பெறப்பட்டது தொடர்பாக நாடு முழுவதிலும் உள்ள அனைத்து வயதினர், பலதரப்பட்ட வருமான நிலையில் உள்ளவர்கள், வேலைக்கு செல்வோர், வீடுகளில் இருப்போர் என அனைத்து தரப்பு மக்களிடமும் இந்த கருத்து கணிப்பு நடத்தப்பட்டுள்ளது. இதில், 80 முதல் 86 சதவீதம் மக்கள் அரசின் நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
மக்கள் ஆதரவு :
நகர்புறவாசிகர் 86 சதவீதம் பேர் அரசின் இந்த நடவடிக்கைக்கு ஆதுரவும், வரவேற்பும் தெரிவித்துள்ளனர். கறுப்பு பணத்தை ஒழிப்பதற்காக, இதனால் ஏற்படும் சிரமத்தை பொறுத்துக் கொள்வதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். புறநகர் பகுதியில் உள்ளவர்களில் 80.6 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். மிக அதிகபட்சமாக அதிக வருமானம் பெறுபோரில் 90.6 சதவீதம் பேர் இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். கிராமப்புறப் பகுதிகளில் 59.4 சதவீதம் பேர் இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
மக்கள் கருத்து :
சரியான நடவடிக்கை, சரியான முறையில் அமல்படுத்தப்பட்டுள்ளது என 71 சதவீதம் பேரும், நல்ல நடவடிக்கை, ஆனால் அமல்படுத்திய முறை சரியில்லை என நகர்புறத்தில் 23.8 சதவீதம் பேரும், புறநகர் பகுதியில் 24.3 சதவீதம் பேரும், கிராமபுறத்தில் 36 சதவீதம் பேரும் கருத்து தெரிவித்துள்ளனர். இதனால் ஏற்பட்ட சிரமங்கள் சிறியது தான், சமாளிக்கக் கூடியது தான் என 38 சதவீதம் நகர்புற வாசிகளும், 35.5 சதவீதம் புறநகர் பகுதிவாசிகளும், 36.8 சதவீதம் கிராமப்புற வாசிகளும் கருத்து தெரிவித்துள்ளனர். இது சமாளிக்க முடியாத பேரிடர் என 12.6 சதவீதம் மக்களே கருத்து தெரிவித்துள்ளனர்.
English Summary:
Action against black money, 500, 1000, notes that the Federal Government withdrew reported more than 80 percent of people across the country have expressed support.