சென்னை: ஷீரடிக்கு சிறப்பு சுற்றுலா ரயிலை, இந்தியன் ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகமான, ஐ.ஆர்.சி.டி.சி., இயக்குகிறது. நாடு முழுவதும், பாரம்பரிய சுற்றுலா இடங்களுக்கும், கோவில்களுக்கும், சிறப்பு சுற்றுலா திட்டங்கள் மூலம், ஐ.ஆர்.சி.டி.சி., சார்பில், சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதன்படி, டிச., 9ல், மதுரையிலிருந்து, சேலம், சென்னை சென்ட்ரல் வழியாக, ஷீரடிக்கு தனி சிறப்பு சுற்றுலா ரயில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஷீரடி சாய்பாபா, பண்டரிபுரம் பாண்டுரங்கன் கோவில் மற்றும் மந்த்ராலயம் சென்று வரலாம். ஏழு நாட்கள் சுற்றுலாவுக்கு, ரயிலில் இரண்டாம் வகுப்பு படுக்கை வசதியில் பயணம் செய்ய, 5,855 ரூபாய்; 'ஏசி' மூன்றடுக்கு பெட்டியில் பயணம் செய்ய, 8,120 ரூபாய் கட்டணம். மேலும் தகவல்களுக்கு, ஐ.ஆர்.சி.டி.சி.,யின், சென்னை சென்ட்ரல் ரயில் நிலைய அலுவலகத்தை, 044 - 6459 4959; 90031 40681 என்ற மொபைல் போன் எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
Tuesday, 15 November 2016
Home »
chennai
,
Railway
,
Tamilnadu
» டிச., 9ல் ஷீரடிக்கு சிறப்பு சுற்றுலா ரயில் : ஐ.ஆர்.சி.டி.சி., ஏற்பாடு