சென்னை: எத்தனை அம்புகள் பாய்ந்து வந்தாலும் திமுகவை யாராலும் அழிக்க முடியாது என அக்கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலின் நீதிக்கட்சி நூற்றாண்டு நிறைவு விழா நிகழ்ச்சியில் பேசியுள்ளார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நீதிக்கட்சி நூற்றாண்டு நிறைவு விழாவில் பேசிய திமுக பொருளாளரும், தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான மு.க. ஸ்டாலின், சமூகத்தில் குலதாழ்ச்சி பாராமல் பழகி வருவது தான் திராவிட இயக்கத்தின் நுாற்றாண்டு சாதனை, பெண்களுக்கு வாக்குரிமை மட்டுமல்லாது கல்வி உரிமையையும் ஏற்படுத்தியது நீதிக்கட்சி என கூறினார்.
மேலும் எத்தனை அம்புகள் பாய்ந்து வந்தாலும் திமுகவை அழிக்க முடியாது எனவும் குறிப்பிட்ட அவர், ஊனமுற்றவர்களை மாற்றுத்திறனாளி என அழைக்கச் செய்தவர் திமுக தலைவர் கருணாநிதி என குறிப்பிட்டார். தமிழை செம்மொழியாக்கியது திமுக ஆட்சியில் தான் எனவும், தமிழ் வாழ்வதற்கும், தமிழருக்கும் திமுக துணை நிற்கும் எனவும் அவர் கூறினார்.
English summary:
DMK treasurer MK Stalin Speech in needhi katchi Party function at Anna Arivalayam