சென்னை: முதல்வர் ஜெயலலிதா பூரண நலம் பெற வேண்டி அதிமுகவினர் அப்பல்லோ மருத்துவமனை அருகே உள்ள விநாயகர் கோவில் அருகே ஞாயிற்றுக்கிழமை இரவு 9 பூசணிக்காய், 9 தேங்காய் உடைத்து சிறப்பு பூஜை செய்துள்ளனர்.
உடல் நலக் குறைவு காரணமாக முதல்வர் ஜெயலலிதா கடந்த மாதம் 22ம் தேதி சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அப்பல்லோ மருத்துவர்கள் குழு, லண்டன் டாக்டர் ரிச்சர்ட் பியல், சிங்கப்பூர் பிசியோதெரபி நிபுணர்கள், டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் குழு சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
அவர் இன்றுடன் 68 நாட்களாக மருத்துவமனையில் உள்ளார். அதிமுகவினர் மற்றும் மக்கள் ஜெயலலிதா பூரண குணமடைய வேண்டி அப்பல்லோ மருத்துவமனை வாசலில் தினமும் சிறப்பு பிரார்த்தனை, பூஜைகள் செய்து வருகிறார்கள்.
இந்நிலையில் அதிமுக மகளிர் அணி சார்பில் நேற்று சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. மேலும் அதிமுக தொண்டர்கள் அன்னதானம் செய்தார்கள். இது தவிர அதிமுகவினர் அப்பல்லோ மருத்துவமனை அருகே உள்ள விநாயகர் கோவில் அருகே ஞாயிற்றுக்கிழமை இரவு 9 பூசணிக்காய், 9 தேங்காய் உடைத்து சிறப்பு பூஜை செய்துள்ளனர்.
அமைச்சர்கள் திடீர் என கோவில்களுக்கு சென்றும் சிறப்பு பூஜை செய்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary:
ADMK cadres performed special poojai near Apollo hospital on sunday night for the well being of the ailing CM Jayalalithaa.