சென்னை: நீர் சத்து குறைபாடு காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா அவற்றில் இருந்து குணமாகிய நிலையில் அவருக்கு நிற்கவும், நடக்கவும் பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாக அப்பல்லோ மருத்துவ வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவசரசிகிச்சை பிரிவில் இருந்து நவீன வசதிகள் அடங்கிய சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்ட முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு மருத்துவர் கண்காணிப்பில் நிற்கவும், நடக்கவுமான சிறிய சிறிய பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு 69-வது நாளாக தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கடந்த செப்டம்பர் 22ம் தேதி இரவு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டு சென்னை ஆயிரம் விளக்கு கீரிம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு மருத்துவ நிபுணர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில் அண்மையில் உடல் நலம் தேறி அவசர வார்டில் இருந்து சாதாரண வார்டுக்கு அவர் மாற்றப்பட்டார்.
தற்போது அவருக்கு அளிக்கப்பட்டு வரும் நடை மற்றும் நிற்றல் பயிற்சி அடுத்த சில நாட்களுக்கு வழங்கப்படும் என்றும் அதன் பின்னர் மருத்துவமனையில் இருந்து முதலமைச்சர் ஜெயலலிதா வீடு திரும்புவது குறித்து தீர்மானிக்கப்படும் என்றும் மருத்துவமனை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
முதலமைச்சரின் உடல்நலம் குறித்து வெள்ளிக்கிழமை பேசிய மருத்துவமனை சேர்மன் பிரதாப் ரெட்டி, ஜெயலலிதா இரண்டு மூன்று நிமிடங்கள் இயல்பாக பேச்சுக் கொடுப்பதாக தெரிவித்திருந்தார். மேலும், முதலமைச்சருக்கு தொடர்ந்து சில சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அவருக்கு அனைத்து உடல் உறுப்புகளும் இயல்பாக இயங்குவதாகவும், நீர் சத்துக்குறைபாடு போன்ற நோய்கள் குணமாகி விட்டதாகவும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பிரதாப்ரெட்டி குறிப்பிட்டிருந்தார். முதலமைச்சர் ஜெயலலிதா மிகவும் பலம் வாய்ந்த முதலமைச்சர் என்றும் அவரது உடல்நிலை குணமடைந்து விட்டதாகவும் தெரிவித்த பிரதாப் ரெட்டி வீடு திரும்புவது குறித்து தானோ, சுகாதாரத் துறை அமைச்சரோ அல்லது செயலாளரோ தீர்மானிக்க வேண்டியதில்லை, ஜெயலலிதாவே தீர்மானித்துக் கொள்வார் என்றும் கூறியிருந்தார்.
முதலமைச்சர் வீடு திரும்புவதில் அவசரம் காட்டவில்லை என்றும் அவருக்கு உடல் நலம் திருப்தியாக இருப்பதாக உணரும் பட்சத்தில் அவர் வீட்டிற்கு செல்லலாம் என்றும் பிரதாப் ரெட்டி தெரிவித்தார்.

English summary:
Chennai: Tamil Nadu chief minister J Jayalalithaa, who has recovered from ailments and is interacting well with people around her, is currently undergoing training to stand and walk.