டெல்லி: காஷ்மீரில் எல்லைப்பகுதியில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் தொடர்ந்து இந்திய நிலைகள் மீதும், அப்பாவி மக்களை குறி வைத்தும் தாக்குதல் நடத்தி வருகிறது.
ஆனால், நிகியால், ஜாண்ட்ராட் பகுதிகளில் 31ம் தேதி இந்தியா அத்துமீறி தாக்குதல் நடத்தியதாகவும், இதில் பாகிஸ்தானை சேர்ந்த ஒரு பெண் உள்பட 6 பேர் பலியானதாகவும், 8 பேர் காயம் அடைந்துள்ளதாகவும் பாகிஸ்தான் கூறுகிறது.
கடந்த 3 நாட்களில் பாகிஸ்தானின் அத்துமீறிய தாக்குதலால், இந்திய எல்லையில் 7 பொதுமக்கள் உயிரிழந்துள்ளதாக இந்தியா குற்றம்சாட்டுகிறது. இதனிடையே, இந்தியாவுக்கான துணைத்தூதர் ஜே.பி.சிங்கை பாகிஸ்தான் தெற்காசியா மற்றும் சார்க் பிரிவின் தலைமை இயக்குனர் முகமது பைசல் நேற்று அழைத்து, கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.
இதுபோன்ற பரபரப்பான சூழலில், டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் உயர்மட்ட குழு அவசர ஆலோசனை தொடங்கியுள்ளது.
ஜம்மு காஷ்மீரில் பள்ளிகள் தொடர்ந்து தீக்கிரையாக்கப்பட்டு வருவது, எல்லையில் பாகிஸ்தானின் அத்துமீறல் போன்ற விவகாரங்கள் குறித்து இதில் ஆலோசிக்கப்படுகிறது. பாதுகாப்புத்துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர், உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் இதில் பங்கேற்றுள்ளனர்.
Wednesday, 2 November 2016
Home »
» எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறல்.. மோடி தலைமையில் உயர்மட்ட குழு அவசர ஆலோசனை