வட மாநிலங்களில், ‘சாத்’ என்றழைக்கப்படும் சூரிய வழிபாடு மிக விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.
அதை முன்னிட்டு டெல்லி புறநகர் பகுதியின் விரைவு சாலை பகுதியில் கிராரி நதிக் கரையோரம் மக்கள் புனித நீராட, நீராடு துறை கட்ட ஆம் ஆத்மி எம்எல்ஏ ரிதுராஜ் கோவிந்த் நேற்று முன்தினம் முயற்சி செய்தார்.
ஆனால், சாத் பூஜை தொடங்குவதற்கு முன்னதாக அமைதியை குலைக்க முயற்சித்த குற்றத்துக்காக எம்எல்ஏ ரிதுராஜ் கோவிந்தை போலீஸார் நேற்றுமுன்தினம் கைது செய்தனர்.
இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ‘‘நீராடு துறை உள்ள பகுதிகள் பாரம்பரியமிக்க இடங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.
அந்தப் பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதை மீறி ரிதுராஜ் கோவிந்த் அமைதியை சீர்குலைக்க முயற்சித்த குற்றத்துக்காக கைது செய்யப்பட்டார்’’ என்று தெரிவித்தனர்.