டோக்கியோ: ஜப்பானில் நேற்று நிலநடுக்கம் ஏற்பட்டது; எனினும், சுனாமி எச்சரிக்கை ஏதும் விடுக்கப்படாததால், மக்கள் நிம்மதி அடைந்தனர். ஜப்பான் தலைநகர் டோக்கியோவிலிருந்து, 350 கி.மீ., தொலைவில் அமைந்துள்ள, ஹோன்ஷூ தீவில், நேற்று காலை, 6:42 மணிக்கு திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. பூமிக்கு அடியில், 44 கி.மீ., ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டது. ரிக்டர் அளவில், 6.2 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால், ஏற்பட்ட உயிர் சேதம், காயம் மற்றும் பொருட்சேதம் குறித்து உடனடியாக தகவல் ஏதும் வெளியாகவில்லை. சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படாததால், மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.