தமிழகத்தில் மேற்கொள்ளப்படும் திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தை நாடு முழுவதும் கிராமப்புறங்களில் பின்பற்றச் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்தார்.
சிறப்பான செயல்பாடு :
கொச்சியில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்ததாவது: திடக் கழிவு மேலாண்மையில், தமிழக அரசு மிக சிறப்பாக செயல்படுகிறது. வருவாய் ஈட்டும் இத்திட்டமானது கிராமப் பஞ்சாயத்துகளுக்கு கூடுதல் வருவாய் ஈட்ட உதவும். தமிழகத்தில், 9,000 கிராமங்களில், திடக் கழிவு மேலாண்மை திட்டம், மிக சிறப்பாக செயல்படுத்தப்படுகிறது.
தமிழகம் முன்மாதிரி:
தமிழக அரசு செயல்படுத்தும் இத்திட்டத்தின் மாதிரியை, நாடு முழுவதும் அமல்படுத்த, மத்திய அரசு முடிவு செய்துள்ளது. நாடு முழுவதும் திட மற்றும் திரவக் கழிவு மேலாண்மைத் திட்டத்தை திறம்பட அமல்படுத்துவது என்பது பிரதமர் நரேந்திர மோடியின் தூய்மை இந்தியா திட்டம் வெற்றி பெறுவதற்கு அவசியம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.