புதுடில்லி : ரூபாய் நோட்டு விவகாரத்தில் கெஜ்ரிவால் சுமத்திய குற்றச்சாட்டுகள் அனைத்தும் வெட்கமில்லா பொய்கள் என மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் விமர்சித்துள்ளார்.
கெஜ்ரிவால் குற்றச்சாட்டு :
கறுப்பு பண ஒழிப்புக்காக 500, 1000 ரூபாய் நோட்டுகளை மத்திய அரசு வாபஸ் பெற்றது, பெரு முதலாளிகளுக்கு சாதகம் என்றும், இந்த அறிவிப்பு பா.ஜ., தலைவர்களுக்கு முன்பே தெரியும் எனவும் டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சுமத்தியிருந்தார்.
4 லட்சம் கோடி டெபாசிட் :
இந்த குற்றச்சாட்டுக்கு பதிலளித்த மத்திய தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்ததாவது: ரூபாய் நோட்டு விவகாரத்தில் கெஜ்ரிவால் சுமத்திய குற்றச்சாட்டுகள் அனைத்தும் வெட்கமில்லாத பொய்கள். 500, 1000 ரூபாய் நோட்டுகளை மத்திய அரசு வாபஸ் பெறுவதாக அறிவிப்பு வெளியான நவ.,8ம் தேதியிலிருந்து, வங்கிகளில் இதுவரை 4 லட்சம் கோடி ரூபாய் 500, 1000 ரூபாய் நோட்டுகள் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
English Summary:
In the case of currency note all shameless accusations as lies by Kejriwal criticized Union Minister Ravi Shankar Prasad.