கருப்பு பணம் மற்றும் கள்ள நோட்டுகளை ஒழிக்கும் நோக்கத்தில் ரூ.500 மற்றும் ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்று கடந்த செவ்வாய்க்கிழமையன்று இரவு பிரதமர் நரேந்திர மோடி அதிரடியாக அறிவிப்பு வெளியிட்டார். இந்த அறிவிப்புக்கு பிறகு வங்கிகள் மீண்டும் செயல்பட துவங்கியதில் இருந்து பழைய ரூபாய் தாள்களை மாற்றி புதிய ரூபாய் தாள்களை பெற மக்கள் வங்கிகளில் அலை மோதினர்.
நோட்டுகளை வங்கியில் மாற்றிக்கொள்ளலாம், தேவையான பணத்தினை ஏடிஎம் மையத்தில் இருந்து எடுத்துக்கொள்ளலாம் என்று அறிவித்துள்ள போதிலும், ஏடிஎம் மையங்களில் போதிய பணம் இல்லை.
இதனால் மக்கள் அனைவரும் 100 ரூபாய் நோட்டுகளுக்காக வரிசையில் மணிக்கணக்கில் காத்துக்கிடக்கின்றனர்.இன்று முதல் சென்னை ஏ.டி.எம்களில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் கிடைக்க தொடங்கின.
இந்நிலையில் டெல்லியில் உள்ள பஜன்புராவில் திருமணம் நடைபெற உள்ள நிலையில் மணமகன் ஒருவர் ஏடிஎம் வாசல் முன் பணத்திற்காக விடிய விடிய காத்து இருந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
சுனில் என்பவருக்கு திருமணம் நடைபெற உள்ளது. திருமண தேவைக்காக அதிகமானோருக்கு பணம் கொடுக்க வேண்டியுள்ளதால் பணம் எடுப்பதற்காக ஏடிஎம் முன் விடிய விடிய காத்து இருந்ததாகவும், எனது மற்ற இரு சகோதரர்களும் அருகாமையில் உள்ள ஏடிஎம்-கள் முன் காத்து இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.