சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பின் தலைவராக, இந்தியாவின் நரேந்தர் பத்ரா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பின் தலைவருக்கான தேர்தல் துபாயில் நடைபெற்றது. இந்தியாவின் நரேந்தர் பத்ரா, அயர்லாந்தின் David Brinie, ஆஸ்திரேலியாவின் Ken Read ஆகியோர் இத்தேர்தலில் போட்டியிட்டனர்.
இறுதியில், நரேந்தர் பத்ரா, சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 59 வயதாகும் நரேந்தர் பத்ரா, 2014ம் ஆண்டு முதல் இந்திய ஹாக்கி அமைப்பின் தலைவராக செயல்பட்டு வருகிறார். சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பின் தலைவராக ஐரோப்பியர்கள் மட்டும் ஆதிக்கம் செலுத்தி வந்த நிலையில், ஆசியாவிலேயே முதன் முறையாக நரேந்தர் பத்ரா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.