பெய்ஜிங் : என்.எஸ்.ஜி.,யில் இந்தியா உறுப்பினராவதற்கு எதிர்பபு தெரிவித்து வரும் சீனா, தனது நிலைப்பாட்டை தொடர்ந்து கடைப்பிடிப்பதாக தெரிவித்துள்ளது.
என்.எஸ்.ஜி., உறுப்பினர்:
அணுசக்தியை ஆக்கப்பூர்வமான பணிகளுக்கு பயன்படுத்துவதற்காக அமைக்கப்பட்டுள்ள, என்.எஸ்.ஜி., குழுமத்தில் இணைவதற்கு இந்தியா விண்ணப்பித்திருந்தது. இதில் உறுப்பினராவதன் மூலம், இந்த அமைப்பில் உள்ள, 48 நாடுகளுடன் அணுசக்தி தொடர்பான தொழில்நுட்பங்களை பெறுவதற்கு வாய்ப்பு கிடைக்கும். தென் கொரியாவின் சியோலில், ஜூனில் நடந்த, என்.எஸ்.ஜி., கூட்டத்தில், இந்தியாவின் முயற்சிக்கு, சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தது.
சீனா முட்டுக்கட்டை:
இந்நிலையில் சீனாவின் வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் கெங் ஷுவாங் தெரிவித்ததாவது: என்.எஸ்.ஜி.,யில் உறுப்பினராக சேர அணு ஆயுதப் பரவல் தடைச் சட்டத்தில் கையெழுத்திடாத இந்தியா உள்ளிட்ட நாடுகள் இணைய, எங்களின் இரு நிபந்தனைகளை நிறைவு செய்ய வேண்டும். அப்படியானால், கூட்டமைப்பில் அந்த நாட்டை இணைப்பதற்கு ஆதரவளிப்பது என்ற சீனாவின் நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை. என்.எஸ்.ஜி., அமைப்பில் உறுப்பினர்களை சேர்ப்பதில் பாகுபாடும், சிறப்புச் சலுகைகளும் காட்டக்கூடாது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.