பெங்களூரு : கூட்டுறவு வங்கிகளில் பழைய 500, 1,000 ரூபாய் நோட்டுகளை ஏற்க அனுமதிக்குமாறு பிரதமர் மோடிக்கு, முன்னாள் பிரதமர் தேவகவுடா கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.
துணிச்சல் முடிவு :
பிரதமர் நரேந்திர மோடிக்கு, தேவகவுடா எழுதிய கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: கறுப்பு பண ஒழிப்புக்காக 500, 1000 ரூபாய் நோட்டுகளை வாபஸ் பெறுவதாக நீங்கள் அறிவித்தது துணிச்சலான முடிவு. இதனை மக்கள் வரவேற்று, சிறு சிரமங்களையும் ஏற்றுக் கொண்டுள்ளனர். இந்நேரத்தில் பெங்களூருவில் பா.ஜ., பிரமுகரின் நடந்த ஒரு ஆடம்பர திருமணம் மக்களின் மனதில், கறுப்பு பண முதலைகள் தப்பிவிடுவார்களோ என்ற குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
கூட்டுறவு வங்கிகளிலும்...
அதேசமயம் அரசின் முடிவால் விவசாயிகள் மற்றும் கிராமப்புற மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். அவர்களுக்கு உதவ மத்திய கூட்டுறவு வங்கிகளிலும் பழைய 500, 1,000 ரூபாய் நோட்டுகளை ஏற்க அனுமதி வழங்க வேண்டும். இதனால் விவசாயிகள் பயனடைவர். இவ்வாறு அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary:
Cooperative banks of the old 500, 1,000 and allow the Prime Minister to accept banknotes, former Prime Minister Deve Gowda has requested by letter.