
சீனாவில் உள்ள புஜோவ் நகரில், சீன ஓபன் சூப்பர் சீரிஸ் பிரிமியர் பாட்மின்டன் தொடர் நடக்கிறது. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில் இந்தியாவின் சிந்து, சீனாவின் சன் யு மோதினர். முதல் செட்டை 21-11 என கைப்பற்றிய சிந்து, இரண்டாவது செட்டை 17-21 என பறிகொடுத்தார். வெற்றியாளரை நிர்ணயிக்கும் கடைசி செட்டில் எழுச்சி பெற்ற சிந்து 21-11 என வென்றார். ஒரு மணி நேரம் 9 நிமிடம் நீடித்த போட்டியின் முடிவில், சிந்து 21-11, 17-21, 21-11 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று கோப்பை கைப்பற்றினார்.
முதல் முறை:
துடிப்பாக செயல்பட்ட சிந்து, 'சூப்பர் சீரிஸ்' தொடரில் முதல் முறையாக கோப்பை வென்றுள்ளார். இத்தொடரில், செய்னாவுக்குப்பின் பட்டம் கைப்பற்றிய இரண்டாவது இந்திய வீராங்கனையானார். ஒலிம்பிக்கில் வெள்ளி பதக்கம் வென்ற சிந்து, தற்போது சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.
English Summary:
Series China Open badminton championships in singles and won acattiya India's Indus.