கொழும்பு: ''இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேன அரசை கவிழ்க்க, ராணுவம் சதி செய்தால், இந்தியப் பிரதமர் மோடி உடனடியாக உதவிக்கு வருவார்,'' என, இலங்கை அமைச்சர் திசநாயகே கூறினார்.
ஆட்சியை பிடிக்க முயற்சி :
இலங்கை பார்லிமென்டில், சமீபத்தில் பேசிய, ஒருங்கிணைந்த எதிர்க்கட்சிகளின் பார்லிமென்ட் தலைவர் தினேஷ் குணவர்த்தனே, 'சிறிசேன அரசு ஜனநாயகத்தை நசுக்கி வருகிறது. இதை பொறுக்க முடியாத ராணுவம், அதிபரை பதவியில் இருந்து நீக்கிவிட்டு, ஆட்சியை பிடிக்க முயற்சிக்கிறது' என்றார்.
மோடி உதவுவார் :
இது குறித்து, இலங்கை சமூக சேவை துறை அமைச்சர் திசநாயகே கூறியதாவது: அதிபர் சிறிசேன, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இடையே நல்ல நட்புறவு உள்ளது. அதிபருக்கு, இந்தியாவின் ஆதரவு எப்போதும் இருக்கும். அவரது ஆட்சியை கவிழ்க்க ஏதாவது சதி நடந்தால், அதை பிரதமர் மோடி சகிக்க மாட்டார்; உடனடியாக, உதவிக்கு வருவார். இவ்வாறு அவர் கூறினார்.
English Summary:
'Sri Lankan President Maithripala Sirisena to topple the government, and if the military coup, Prime Minister Modi, will help immediately,' 'the Sri Lankan Minister Dissanayake said.