பெலகாவி: கர்நாடகாவில், சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்களால், ஆபத்து ஏற்படும்' என, சட்டசபையில், பா.ஜ., குற்றம் சாட்டியது. இப்பிரச்னை தொடர்பாக, உள்துறை அமைச்சர் பரமேஸ்வருடன் காரசார விவாதம் நடந்தது.
சட்டசபை கேள்வி நேரத்தில் நேற்று, பா.ஜ., உறுப்பினர் சுனில் குமார் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்து, உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் கூறியதாவது: மாநிலத்தில், சட்ட விரோதமாக தங்கியிருப்பவர்களை கண்டுபிடிக்க, மாவட்ட அளவில் சிறப்பு செயல்படை அமைக்கப்பட்டுள்ளது. கூடுதல் தலைமை செயலர், போலீஸ் டி.ஜி.பி., ஆகியோர், அதிரடி படைகளின் செயல்பாடுகளை கண்காணிப்பர்.உள்ளூர் போலீசார், சட்ட விரோதமாக தங்கியிருப்பவர்கள் பற்றிய தகவல்களை சேகரித்து வருகின்றனர். மாநிலத்தில், 748 வங்க தேசத்தினர் வசித்து வருவதாக தகவல் கிடைத்துள்ளது. இதில், 283 பேர் சட்ட விரோதமாக வசிப்பதாக தெரிகிறது; அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். ஏற்கனவே, 52 பேரை வெளியேற்றியுள்ளோம்.சட்ட விரோதமாக வசித்து வருவது தொடர்பாக, 25 வழக்குகள் பதிவாகியுள்ளன. இதுபோன்று வசிப்பவர்களின் பிரச்னை மிகப்பெரியது. இவர்களால், பாதுகாப்புக்கு அபாயம் ஏற்படும் சாத்தியமுள்ளது. எனவே, அரசு இதை தீவிரமாக கருதுகிறது.வங்க தேசத்திலிருந்து இந்தியாவுக்குள் நுழைபவர்களை தடுத்து நிறுத்துவது, கர்நாடக அரசின் எல்லைக்குள் வராது. இவ்விஷயத்தில் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பா.ஜ., சுனில் குமார்: வங்கதேசத்திலிருந்து, கர்நாடகாவில் சட்டவிரோதமாக வசிப்பவர்களுக்கு ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை தரப்பட்டுள்ளது. இவை தவறாக பயன்படுத்துவதை கட்டுப்படுத்த வேண்டும். வெவ்வேறு மாவட்டங்களில் ஆயிரக்கணக்கானோர், சட்ட விரோதமாக வசித்து வருகின்றனர். அவர்களை கண்டுபிடித்து, வெளியேற்ற வேண்டும்.
பா.ஜ., போப்பையா: மாநிலத்தில், ஐந்து லட்சம் பேர், சட்ட விரோதமாக வசித்து வருகின்றனர் என, தகவல் கிடைத்துள்ளது. குடகு மாவட்டத்தில் மட்டுமே ஒரு லட்சம் பேர் வசிக்கின்றனர். இவர்கள், காபி தோட்டங்களில் பணியாற்றுகின்றனர். இவர்களால் எதிர்காலத்தில் பெரிய பிரச்னை ஏற்படும்.ம.ஜ.த., நிங்கய்யா: ஷிவமொகாவிலும் அதிக எண்ணிக்கையில், இதுபோன்று சட்ட விரோதமாக வசிப்பவர்கள் உள்ளனர். இது தொடர்பாக விரிவாக ஆய்வு நடத்த வேண்டும்.
பா.ஜ., ஜீவராஜ்: மாநிலத்தில் சட்ட விரோதமாக வசிப்பவர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் கார்டுகள் கொடுத்த அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.அமைச்சர்: கர்நாடகாவில் சட்ட விரோதமாக தங்கியுள்ள வங்க தேசத்தினரை வெளியேற்ற தேவையான நடவடிக்கை எடுக்கப்படும். தான்சானியா, நைஜிரியா உட்பட ஆப்ரிக்காவின் வெவ்வேறு நாடுகளை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர், விசா காலம் முடிந்தும், பெங்களூரில் சட்ட விரோதமாக வசிக்கின்றனர். அவர்களில் 1,500 பேரை அடையாளம் கண்டு, வெளியேற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.பா.ஜ., ராமசந்திர கவுடா: போதை பொருள் விற்பனையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அமைச்சர்: பெங்களூரு நகர், போதை பொருள் விற்பனை மையமாக மாறி வருவது ஆதங்கத்துக்குரிய விஷயமாகும். போதை பொருட்களை முழுமையாக கட்டுப்படுத்த அரசு, அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும். போதை பொருட்கள் விற்பனை செய்பவர்கள் மீது வழக்கு பதிவு செய்து, தண்டனைக்கு உட்படுத்தப்படுவர்.வேறு மாநிலங்களுடன் ஒப்பிட்டால், கர்நாடகாவில் போதை பொருட்கள் விற்பனை குறைவு. ஆனாலும், இதன் பின்விளைவுகள் அதிகம் என்பதால், இவற்றை கட்டுப்படுத்த, அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும்.இவ்வாறு, விவாதம்
நடந்தது.
English Summary:
In Karnataka, illegal residents, the risk that, in the assembly, BJP accused. In connection with the issue, Home Minister paramesvar happened with the partisan debate