வாஷிங்டன் : அமெரிக்க அமைச்சராக தேர்வாகியுள்ள டிரம்பின் அமைச்சரவையில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பாபி ஜிண்டால் இடம் பெறக் கூடும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
முதல் இந்திய வம்சாவளியினர்:
அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளர் தேர்தலில் போட்டியிட்டு பின் விலகியவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பாபி ஜிண்டால்(45). அமெரிக்காவில் மாகாண கவர்னராக பதவி வகித்த முதல் இந்திய வம்சாவளியினர் என்ற பெருமை இவருக்கு உண்டு. இந்நிலையில் டிரம்பின் அமைச்சரவையில் பாபி ஜிண்டால் இடம் பெறக்கூடும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
முக்கிய பதவிக்கு..
ஜிண்டாலுக்கு சுகாதாரத்துறை அளிப்பது குறித்து ஆலோசனை நடைபெறுவதாக அமெரிக்க பிரபல பத்திரிகையான வால் ஸ்ட்ரீட் ஜர்னல் செய்தி வெளியிட்டுள்ளது. நெருக்கடியை சமாளிக்கும் திறன், நல்ல நிர்வாகம் கொண்டவர் என்பதால் முக்கிய பதவிக்கு பாபி ஜிண்டாலை டிரம்ப் பரிசீலிக்கலாம் என கூறப்பட்டுள்ளது. அதிபர் போட்டியிலிருந்து விலகிய பென் கார்ஸன் பெயரும் பரீசிலனையில் உள்ளது.
ஜார்ஜ் புஷ் அதிபராக இருந்த போது சுகாதாரத் துறை அமைச்சரின் முதன்மை ஆலோசகராக பாபி ஜிண்டால் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.