மெல்போர்ன்: இந்தியாவில் ரூ.500 மற்றும் 1000 நோட்டுக்கள் வாபஸ் பெறப்பட்டதை போல், ஆஸ்திரேலியாவில் 100 டாலர் நோட்டுக்களை திரும்ப பெற வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
மோடி அதிரடி:
இந்தியாவில் கறுப்பு பணம் மற்றும் கள்ள நோட்டுக்களை ஒழிக்கும் வகையில் ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுக்கள் வாபஸ் பெறப்படுவதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார். இதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தாலும், பொது மக்கள் மத்தியில் வரவேற்பு உள்ளது. இந்நிலையில், இதேபோன்று ஆஸ்திரேலியாவிலும் 100 டாலர் நோட்டை திரும்ப பெற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து வருகிறது.
பலன்கள்:
இது தொடர்பாக ஆஸ்திரேலியாவில் முதலீட்டு வங்கியான யுபிஎஸ் வங்கி வெளியிட்ட ஆய்வறிக்கை ஒன்றில் கூறப்பட்டுள்ளதாவது: வங்கிகளில் டெபாசிட் அதிகரித்து வருகிறது. டிஜிட்டல் மற்றும் பணமில்லா பரிமாற்றத்தை அதிகரிக்கவும், வங்கிகளில் மக்கள் காத்து கிடப்பதை தடுக்கவும் 100 டாலர் நோட்டை வாபஸ் பெற்றால், வங்கிகளுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும். இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை காரணமாக வட்டி விகிதங்கள் குறையும். பணப்பரிமாற்றம் காரணமாக பதுக்கிவைக்கப்பட்டுள்ள கறுப்பு பணம் வெளியே வரும்.
அதிக பலன்:
ஆஸ்திரேலியாவில் டிஜிட்டல் பணப்பரிமாற்றம் அதிகரித்து வரும் நிலையில், அதிக மதிப்பு கொண்ட ரூபாய் நோட்டுக்களை திரும்ப பெற்றுக்கொள்ளலாம். பணம் மூலமான பணப்பரிமாற்றம் குறைந்து வருகிறது. கடந்த 2009ல் ஏ.டி.எம்.,மில் 3.4 சதவீதம் குறைந்த நிலையில், கிரடிட் கார்டு மூலமான பரிமாற்றம் 7.3 சதவீதம் அதிகரித்துள்ளது. ஆஸ்திரேலியாவில் அதிக பண மதிப்பு கொண்ட நோட்டுக்களை வாபஸ் பெற்றால், அது பொருளாதாரத்திற்கும் வங்கிகளுக்கும் நல்ல பலனளிக்கும். மேலும் இதனால், பண மோசடி சம்பவங்கள் தடுக்கப்படும். வரி மூலம் கிடைக்கும் வருமானம் உயரும். நலத்திட்ட மோசடிகள் தடுக்கப்படும் எனக்கூறப்பட்டுள்ளது.