சென்னை : 'குமரி கடல் பகுதியில், காற்றழுத்த தாழ்வு மண்டலம் நீடிப்பதால், தென் மாவட்டங்களில், மழை தொடரும்' என, வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
காற்றழுத்த தாழ்வு மண்டலம் :
வங்கக் கடலின் தென் மேற்கு பகுதியை ஒட்டி, இலங்கை அருகே, இந்திய பெருங்கடலில், காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த மூன்று நாட்களாக மையம் கொண்டுள்ளது. இதனால் தென் மாவட்ட கடலோர பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. அதிகபட்சமாக வேதாரண்யத்தில் 55 மி.மீ., மழையும், திருத்துறைப்பூண்டியில் 100 மி.மீ., மழையும் பெய்துள்ளது.
மழை தொடரும் :
இதுகுறித்து வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியதாவது: குமரி கடல் பகுதியில் நிலை கொண்டு இருந்த காற்றழுத்தம் வடக்கு நோக்கி நகர்வதால், தென் மாவட்ட கடலோரப் பகுதியில் கனமழை பெய்யும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யும். மேலும், கேரளா, லட்சத்தீவு பகுதிகளிலும் கனமழை பெய்யும். வட தமிழகத்தில் பெரும்பாலும் வறண்ட வானிலை காணப்படும். சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும். இவ்வாறு தெரிவித்துள்ளனர்.
English Summary:
Kumari Sea area, extending Kasparov zone, the southern districts, the rain will continue, as the meteorological center said.