கரூர்:செல்லாத ரூபாய் நோட்டுகளை, வாக்கா ளர்களுக்கு வாரி வழங்குவதால், அரவக்குறிச்சி தேர்தலை ரத்து செய்யக்கோரி, பா.ம.க., - பா.ஜ., உள்ளிட்ட அரசியல் கட்சிகள் சார்பில், தேர்தல் செலவின பார்வையாளரிடம் மனு வழங்கப் பட்டது. இதனால், மீண்டும் தொகுதியில் தேர்தல் ரத்து செய்யப்படுமோ என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தொகுதியில், நாளை மாலை, 5:00 மணியுடன் பிரசாரம் நிறைவு பெறுகிறது. கடந்த, இரண்டு நாட்களாக, தி.மு.க., தரப்பில், 500 ரூபாய், அ.தி.மு.க., தரப்பில், 1,000 ரூபாய், அவரவர் கட்சி சார்ந்த வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா நடக்கிறது. மத்திய அரசால், செல்லாது என்று அறிவிக்கப் பட்ட, 500, 1,000 ரூபாய் நோட்டுகளை வழங்கி வருகின்றனர்.
ஒருவார காலமாக எந்த அச்சமுமின்றி, பணப்பட்டுவாடா கனஜோராக நடந்து வருகிறது.
தேர்தலை நடத்தும் மாவட்ட நிர்வாகம் இது குறித்து கண்டு கொள்ளாமல் உள்ளதால்,வாக்காளர் களும், பிற அரசியல் கட்சியினரும் அதிர்ச்சியடைந் துள்ளனர்.
'வாக்காளர்களுக்கு தலா, 500, 1,000 என்ற விகிதத் தில், அ.தி.மு.க., - தி.மு.க., கட்சிகள் பணப்பட்டு வாடா செய்கின்றன' என கூறி, அரவக்குறிச்சி தேர்தல் செலவின பார்வையாளர் அஜய் தத்தார்யா குல்கர்னியிடம், பா.ம.க., வேட்பாளர் பாஸ்கரன், புகார் மனு அளித்தார்.
தொடர்ந்து, பா.ஜ., மாநில பொதுச்செயலர் நரேந்திரன் தலைமையிலான நிர்வாகிகள், தேர்தல் நடத்தும் அலுவலர் சைபுதீனிடம், புகார் மனு கொடுத்தனர்.
அப்போது, நரேந்திரன் கூறியதாவது: அ.தி.மு.க., - தி.மு.க.,வினர், வாக்காளர்களுக்கு மீண்டும் பணப் பட்டுவாடா செய்து, ஜனநாயகத்தை கேலி கூத்தாக்கி விட்டனர்.
எனவே, அரவக்குறிச்சி தொகுதியில் மீண்டும் தேர்தலை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். அரசியல்கட்சியினர் புகார் காரணமாக, அரவக்குறிச்சியில் மீண்டும் தேர்தல் ரத்து செய்யப் படலாம் என்ற பரபரப்பு நிலவுகிறது.
பணத்துடன் வந்த பெண்:
அரவக்குறிச்சி தொகுதி,நாகம்பள்ளி அடுத்த கேத்தம் பட்டியை சேர்ந்த இந்திராணி,30,என்பவர், அ.தி.மு.க., தரப்பில் வழங்கப்பட்ட,3,000 ரூபாயுடன்,
பா.ம.க., பிரமுகர்களுடன் சென்று, தேர்தல் செலவின பார்வையாளர் அஜய் தத்தார்யா குல்கர்னியிடம் புகார் அளித்தார்.இதுதொடர் பாக, அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அறிக்கை தயாரிப்பு:
தி.மு.க., - அ.தி.மு.க.,வினர் பணப்பட்டுவாடா செய்வதாக கூறப்படும் புகார் குறித்து, தீவிர விசாரணை நடத்தப்படும். குறிப்பாக, தொகுதி யில் உள்ள கிராமங்களுக்கு சென்று, வாக்காளர் களிடம் விசாரித்து, அதன் அறிக்கையை இந்திய தலைமை தேர்தல் ஆணையத்துக்கு உடனடி யாக அனுப்பிவைக்கப்படும்.