நெல்லை அருகே பணப் பிரச்சனை காரணமாக மனைவியை வெட்டி கொன்ற கணவன் காவல் நிலையத்தில் சரண் அடைந்தார்.
நெல்லை மாவட்டம் தென்காசியை சேர்ந்தவர் ராமையா. கட்டுமான தொழிலாளியான இவருக்கு, இரு மனைவிகள் உள்ளனர். இவரது முதல் மனைவிக்கும் இவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு ஏற்கனவே பிரிந்து வாழ்ந்து வருகிறார்.
இந்த நிலையில் இரண்டாவது மனைவி மகாலட்சுமியுடன், பணம் கொடுக்கல்-வாங்கல் பிரச்சனையில் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் வாக்குவாதம் முற்றி, மகாலட்சுமியை அரிவாளால் ராமையா வெட்டியுள்ளார்.
சம்பவ இடத்திலேயே மகாலட்சுமி உயிர் இழந்தார். இச் சம்பவம் தொடர்பாக ராமையா காவல் நிலையத்தில் சரணடைந்தார். இதுகுறித்து காவல்துறையினர் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
English Summary:
Husband killed his wife and cut due to the financial problems in the vicinity of the NEX to the police station surrendered.