
சென்னையில் கனமழை:
சென்னை -ராயப்பேட்டை, எழும்பூர், மயிலாப்பூர் மற்றும் திருவல்லிக்கேணி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது.
இன்று மழைக்கு வாய்ப்பு:
தமிழகத்தில், வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ளது; ஆனால், இயல்பை விட மிக குறைவாக பெய்து வருகிறது. இதனால், அணை, ஏரிகளுக்கு நீர்வரத்து குறைந்துள்ளது. இந்நிலையில், நான்கு நாட்களாக, திருநெல்வேலி, துாத்துக்குடி, விருதுநகர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்கள்; மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியான நீலகிரி மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இன்றும், இந்த பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக, இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.