உயர் மதிப்பு கொண்ட கரன்சிகளை செல்லாது என அறிவிக்கும் திட்டம் எதுவும் இல்லை என்று பாகிஸ்தான் நிதி அமைச்சர் இஷாக் தார் உறுதிபடக் கூறினார்.
இது தொடர்பாக ஊடகங்கள் வெளியிடும் செய்திகள் யாவும் வெறும் ஊகம் மட்டுமே. அவை மக்களிடையே பீதியைக் கிளப்புவதாக உள்ளன என்று அவர் மேலும் கூறினார்.
இது தொடர்பாக "டான்' நாளிதழ் வெளியிட்டிருக்கும் செய்தியில் தெரிவித்திருப்பதாவது:
அண்டை நாடான இந்தியா, ரூ.500, ரூ. 1000 கரன்சிகள் செல்லாது என்று அண்மையில் அறிவித்தது. கருப்புப் பண ஒழிப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக அவ்வாறு அறிவிப்பதாக இந்தியா தெரிவித்தது. இந்த நிலையில், பாகிஸ்தானும் அத்தகைய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை அந்த நாட்டில் முன்வைக்கப்படுகிறது. அது போன்ற ரகசிய நடவடிக்கைக்கு அரசு தயாராகி வருவதாக சில ஊடகங்களில் செய்தி வெளியாகியது. இதனை ஒரு சாரார் வரவேற்றபோதிலும், வேறு சில சாரார் இடையே ஒரு வித கவலையையும் தோற்றுவித்திருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், பாகிஸ்தானின் 5000 ரூபாய் கரன்சியைப் புழக்கத்திலிருந்து திரும்பப் பெறுவது தொடர்பாக அரசு ஆலோசித்து வருகிறது என்று அரசு பிரதமர் நவாஸ் ஷெரீஃபின் சிறப்பு உதவியாளர் ஹாரூன் அக்தர் கான் திங்கள்கிழமை தெரிவித்தார். மேலும் ரூ.40,000 மதிப்பிலான சிறப்பு கடன் பத்திரங்களையும் அரசு ரத்து செய்ய உத்தேசித்து வருகிறது என்று அவர் கூறினார்.
இது நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், உயர் மதிப்பு கரன்சிகளைத் திரும்பபப் பெறும் திட்டம் இல்லை என்று நிதி அமைச்சர் இஷாக் தார் கூறியுள்ளார். அவர் கூறியதாவது:
ரூ.5000 கரன்சியைத் திரும்பப் பெற அரசு திட்டமிடவில்லை. தற்போதைய தகவல்கள் யாவும் வெறும் வதந்தியே. அதே போல, ரூ.40,000 மதிப்பிலான சிறப்பு கடன் பத்திரங்களை ரத்து செய்யவும் அரசு திட்டமிடவில்லை என்று உறுதிபடக் கூறுகிறேன். பொது பட்ஜெட்டுக்கு முந்தைய நிதி நிலை ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அப்போது, பட்ஜெட் வெளியாவதற்கு முன்பாகவே உயர் மதிப்பு கரன்சிகளைத் திரும்பப் பெற வேண்டும் என்று வரி சீர்திருத்த ஆணையம் ஆலோசனை வழங்கியது. ஆனால் அரசு அதனை ஏற்கவில்லை. வரி சீர்திருத்தம் குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்டுள்ள ஆலோசனைக் குழு இந்த விவகாரம் குறித்து தனது ஆலோசனையை வழங்கும். என்றார் அவர்.
தற்போது அந்த நாட்டில், 40,000 ரூபாய் மதிப்பிலான சிறப்புக் கடன் பததிரங்களை எந்த ஆதாரமும் அளிக்காமல், வாங்க முடியும். இவை வெளிச்சந்தையிலும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விவகாரத்தால் ஏராளமான கருப்புப் பணம் புழக்கத்தில் வந்துள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும் பல மோசடிகளும் நடைபெற்றுள்ளன.
இதனிடையே, நாட்டில் ஊழலை ஒழிக்க வேண்டுமானால், 1000 ரூபாய், 5000 ரூபாய் கரன்சி நோட்டுகளைத் திரும்பப் பெற வேண்டும் என்று பாகிஸ்தான் மக்கள் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற மேலவை உறுப்பினர் உஸ்மான் ஸைஃபுல்லா கான், நாடாளுமன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்தார்.
இந்தியாவில் 500, 1000 கரன்சிகள் ரத்து செய்யப்பட்ட நடவடிக்கை நல்ல பலன்களை அளித்து வருகிறது என்று அவர் நாடாளுமன்றத்தில் பேசினார்.