புதுடில்லி: வெளிநாடுகளில் குற்றம் செய்துவிட்டு, நம் நாட்டில் ஊடுருவும் இந்தியர்களுக்கு எதிராக, சட்ட நடவடிக்கை எடுக்கும் அதிகாரம், சி.பி.ஐ.,க்கு வழங்கப்பட்டுள்ளது.
ஒப்படைத்தல்:
இதுகுறித்து, மூத்த அரசு அதிகாரி ஒருவர் கூறியதாவது: வெளிநாடுகளில் குற்றச் செயல்களில் ஈடுபடும் பல இந்தியர்கள், நம் நாட்டில் மீண்டும் நுழைந்து, சட்ட சிக்கலின்றி வசித்து வருகின்றனர். இத்தகைய குற்றவாளிகளை கைது செய்து, அவர்கள் குற்றம் புரிந்த நாடுகளிடம் ஒப்படைப்பது தொடர்பான ஒப்பந்தங்கள் செய்யப்படாததால், அவர்கள் தப்பி வந்தனர்.
சி.பி.ஐ.,க்கு அதிகாரம்:
இந்நிலையில், இதுபோன்ற குற்றவாளிகளை கைது செய்து, நடவடிக்கை எடுக்கும் அதிகாரத்தை, சி.பி.ஐ.,க்கு மத்திய அரசு வழங்கியுள்ளது. இதனால், வெளிநாடுகளில் குற்றச் செயல்களில் ஈடுபட்ட இந்தியர்கள், நம் நாட்டில் இனி சுதந்திரமாக வாழ முடியாது. இவ்வாறு மூத்த அதிகாரி கூறினார்.
விசாரணை நடத்தும் வாய்ப்பு :
பல்கேரியா, பிரான்ஸ், ஜெர்மனி, சவுதி அரேபியா, போர்ச்சுகல், வியட்நாம் போன்ற நாடுகள், குற்றங்கள் புரிந்து, இந்தியாவுக்கு தப்பிவரும் இந்தியர்களை கைது செய்து, விசாரணை நடத்துவதில் ஆர்வம் காட்டுவதில்லை. இருப்பினும், அரசின் புதிய நடவடிக்கையால், அந்த குற்றவாளிகளுக்கு எதிராக, சி.பி.ஐ., விசாரணை நடத்தும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
அதிகாரம்:
குறிப்பாக, வெளிநாடுகளில் இழைக்கப்படும் குற்றச் செயல், இந்தியாவிலும் குற்றமாக கருதப்பட்டால், அக்குற்றவாளிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும். இதற்கான அனுமதியை, உள்துறை அமைச்சகத்திடம் பெற்று, தக்க நடவடிக்கை மேற்கொள்வதற்கான அதிகாரம், சி.பி.ஐ.,க்கு வழங்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.