புதுடில்லி : முன்னாள் கிரிக்கெட் வீரர் நவ்ஜோத் சிங் சித்து மற்றும் அவரது மனைவி காங்., கட்சியில் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ராஜினாமா :
பிரபல முன்னாள் கிரிக்கெட் வீரர் நவ்ஜோத் சிங் சித்து, அமிர்தசரசில் பா.ஜ., எம்.பி.,யாக 3 முறை பதவி வகித்த சித்துவுக்கு கடந்த தேர்தலில் வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதனையடுத்து அதிருப்தியடைந்த சித்துவுக்கு பா.ஜ., ராஜ்யசபா எம்.பி., பதவி வழங்கியது. இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் தனது எம்.பி., பதவியை சித்து ராஜினாமா செய்தார். இதனையடுத்து முதலில் ஆம் ஆத்மியில் இணையவிருப்பதாக தகவல் வெளிவந்தது. பின் ‛ஆவாஸ்-இ-பஞ்சாப்' எனும் புதிய கட்சியை தொடங்க போவதாக சித்து அறிவித்தார்.
காங்., கட்சியில் இணைவு :
இந்நிலையில், திடீர் திருப்பமாக அவர் காங்கிரஸில் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சித்து, காங்., கட்சியின் அம்ரிந்தர் சிங்கை டில்லியில் சந்தித்ததாகவும், வரும் 28ம் தேதி(நவ.,28) சித்துவும், சித்துவின் மனைவி நவ்ஜோத் கவுர் இருவரும் காங்., கட்சியில் இணையவிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
English Summary:
Former cricketer Navjot Singh Sidhu and his wife, Cong., To join the party reported.