சென்னை: திருப்பரங்குன்றம், தஞ்சை, அரவக்குறிச்சி தொகுதிகளில் வாக்களிக்க வரும் பொது மக்களின் இடது கை ஆட்காட்டி விரலில் மை இருந்தால் வாக்களிக்க முடியாது என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி கூறியுள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த ராஜேஷ் லக்கானி, ஒரு தொதிக்கு 31 பேர் கொண்ட பார்வையாளர் குழு என 3 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இவர்கள் 3 ஷிப்டுகளில் பணியாற்றுவார்கள். வாக்குப்பதிவு நடைபெறும் நாளன்று 2 மணி நேரத்துக்கு ஒரு முறை வாக்குப் பதிவு நிலவரம் வெளியிடப்படும்.
இடைத் தேர்தலில் வாக்களிக்கும் வாக்காளர்களுக்கு இடது கை ஆள்காட்டி விரலில் மை வைக்கப்படும். ஆனால், தவறுதலாக வங்கியில் பணம் மாற்றும் போது மக்களின் இடது கை ஆள்காட்டி விரலில் மை வைக்கப்பட்டிருந்தால், அவர்கள் இடைத் தேர்தலில் வாக்களிக்க முடியாது என்று அறிவித்துள்ளார்.
மேலும், தபால் வாக்குப் பதிவு நடந்தால் முறைகேடுகள் நடைபெறும் என திமுக புகார் கூறியிருந்ததால், 3 இடைத் தேர்தல்களிலும் தபால் வாக்குப் பதிவு கிடையாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Summary: If the ink on the index finger of the left hand not vote: Rajesh lakkani