சென்னை: 'வங்கியில் பணம் மாற்ற வருவோருக்கு, அழியாத மை வைக்கும் உத்தரவை, உடனே திரும்ப பெற வேண்டும்' என, தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
அவரது அறிக்கை: 'வெளிப்படையான நிர்வாகம், மக்களுக்கான அரசு' என்ற முழக்கத்தை, 2014 பார்லி., தேர்தல் அறிக்கையில் முன் வைத்து, பா.ஜ., ஆட்சிக்கு வந்தது. தற்போது, மத்திய அரசு ஏழை, எளிய, நடுத்தர மக்களின் விரலில், மை வைக்க முடிவு செய்திருப்பது கண்டனத்திற்குரியது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் இச்செயல், ஜனநாயக பாதையில் இருந்து, நாடு வேறு எங்கோ, திசைமாறிச் செல்கிறதோ என்ற அச்சத்தை, மக்கள் மத்தியில் ஏற்படுத்தி உள்ளது. சொந்த நாட்டின் மக்களை சந்தேகிக்கும் போக்கை, மத்திய அரசு கைவிட வேண்டும்.வங்கிகளுக்கு பணம் எடுக்க வருவோருக்கு, அழியாத மை வைப்போம் என்ற உத்தரவை, உடனே திரும்பப் பெற வேண்டும். அத்தியாவசிய தேவைகளுக்கு கூட, பணம் எடுக்க முடியாமல் தவிக்கும் மக்களின் இன்னல்களை போக்கும் விதத்தில், வங்கிகளின் பண வினியோக முறையை எளிமைப்படுத்த வேண்டும். இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.