புதுடில்லி: ரூ.500, 1000 நோட்டுக்களை மத்திய அரசு வாபஸ் பெற்ற உத்தரவை திரும்பப் பெற வேண்டும் என கோரி எதிர்க்கட்சிகள் பேரணியாக சென்று ஜனாதிபதியை சந்தித்து மனு அளித்தன.
பேரணி:
ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை சந்தித்து கோரிக்கை விடுப்பதற்காக மேற்குவங்க முதல்வரும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி தலைமையில் பேரணி நடந்தது. இதில், மகாராஷ்டிராவில் ஆளும் பா.ஜ.,வின் முக்கிய கூட்டணி கட்சியாக இருக்கும் சிவசேனாவும் கலந்து கொண்டுள்ளது. தேசியவாத கட்சி, உமர் அப்துல்லாவின் காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சிகளும் கலந்து கொண்டன. அனைத்து எதிர்க்கட்சிகளின் தலைவர்களும் இந்த பேரணியில் பங்கேற்றனர். பார்லி., கட்டடம் முன் துவங்கிய இந்த பேரணி, ஜனாதிபதி மாளிகை வரை சென்றது.
ஜனாதிபதியை சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மம்தா, அரசு இயல்பு நிலையை மீண்டும் கொண்ட வர வேண்டும். விவசாயிகளிடம் பணம் இல்லை. மக்கள் செத்துக் கொண்டிருக்கிறார்கள். நாங்கள் கறுப்பு பணத்திற்கு எதிரானவர்கள். அரசு ஏற்படுத்திய இந்த பதற்ற நிலையால் 20 முதல் 25 பேர் உயிரிழந்துள்ளனர். சாமானிய மக்களை ஏன் கஷ்டப்படுத்துகிறீர்கள்? ஒரு திட்டத்தை கொண்டு வருவதற்கு முன் மத்திய அரசு அனைத்து ஏற்பாடுகளையும் செய்திருக்க வேண்டும். அரசு கறுப்பு பண பாதிப்பிலிருந்து மக்களை காக்க வேண்டும். முன்பெல்லாம் ஏடிஎம் என்றால் எந்நேரமும் பணம். ஆனால் தற்போது எப்போது பணம் வரும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. ரூபாய் நோட்டு தடை என்பது ஏழைகளுக்கு எதிராக நடத்தப்படும் அச்சுறுத்தல். திட்டமிடாமல் அரசு இந்த தடையை கொண்டு வந்துள்ளது.
ஜனாதிபதியிடம் மனு:
இதில் தலையிடும் படி ஜனாதிபதியிடம் கேட்டுள்ளோம். எங்களின் குறைகள் அடங்கிய மனுவையும் அவரிடம் அளித்துள்ளோம். அவர் தலையிட்டு நல்ல முடிவை எடுப்பார் என நம்புகிறோம். பிளாஸ்டிக் பொருளாதார இந்தியாவில் சாத்தியமற்றது. அதற்கு முறையான ஏற்பாடுகளை செய்ய வேண்டும் . இயல்பு நிலையை கொண்டு வர மத்திய அரசை வலியுறுத்துமாறு ஜனாதிபதியிடம் கேட்டுள்ளோம். ரூபாய் நோட்டுக்களை தடை செய்ததன் மூலம் நிதி நெருக்கடி ஏற்பட்டதை தவிர வேறு என்ன நடந்தது என்றார்.