கவுகாத்தி: அசாம் எல்லை கிராமங்களில் புதிய நோட்டுக்கு தட்டுப்பாடு நிலவுவதால், பொதுமக்கள் பக்கத்து நாடான பூட்டான் நாட்டு கரன்சிகளை பயன்படுத்தும் அவலம் ஏற்பட்டுள்ளது.
:ஊழல் மற்றும் கறுப்பு பணத்தை ஒழித்து கட்ட, , 500 - 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என, பிரதமர் மோடி அதிரடியாக அறிவித்தார். புதிய 2000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் வாங்குவதற்காக பொதுமக்கள் ஏ.டி.எம்.களில் நீண்ட வரிசையில் காத்திருக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது..
பூட்டான் கரன்சிகள்:
இந்நிலையில் அசாமின் எல்லை கிராமங்களில் போதிய வங்கி சேவை மற்றும் ஏ.டி.எம்.மையங்கள் இல்லாததால் கிராமவாசிகள் பூட்டான் நாட்டு கரன்சிகளை பயன்படுத்தி வருகின்றனர். இந்திய ரூபாய் மதிப்பைவிட 25 சதவீதம் அதிக மதிப்புடைய பூட்டான் கரன்சிகளை பயன்படுத்தும் அவலம் ஏற்பட்டுள்ளது.
அசாமின் மேற்கு மாவட்டங்களான பூட்டான் எல்லையையொட்டியுள்ள ஹைதிசூர், தாத்கூரி, சியாங்க் ஆகிய கிராமங்களில் பூட்டான் கரன்சிகள் மக்களிடம் அதிகம் புழக்கத்தில் இருந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தாராள புழக்கம்:
பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் உள்ளிட்ட பலசரக்கு கடைகளிலும், சில்லரை வியாபாரிகளும் பூட்டான் கரன்சிகளை கொடுப்பதால் கடை உரிமையாளர்களும் பூட்டான் கரன்சிகளை வாங்கிக் கொள்கின்றனர்.
இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த அர்ச்சனா தமங், 35 என்ற பெண் கூறுகையில், புதிய நோட்டு கிடைப்பதி்ல் சிரமமாக உள்ளது. 50 கி.மீ.தூரம் சென்று தான் வங்கியில் மாற்ற வேண்டியுள்ளது. இங்கு நடமாடும் ஏ.டி.எம். வாகனம் கடந்த சில நாட்களாக வரவில்லை. அப்படியே வந்தாலும் டெபாசிட் மட்டுமே ஏற்றுக்கொள்கின்றனர். கையில் உள்ள பணத்தை மாற்றித்தருவதில்லை என்றார்.
English Summary:
Because there is a shortage of the new node in the border villages of Assam, the public uses of currencies in neighboring Bhutan tragedy occurred.