மும்பை: கறுப்பு பணத்தை வெளிக்கொண்டு வருவதற்காக, அதிக பண மதிப்பு கொண்ட ரூபாய் நோட்டுக்கள் வாபஸ் பெறப்பட்ட நிலையில், கூட்டுறவு வங்கிகள் அந்த பணத்தை மாற்ற உதவி செய்வதாக புகார் எழுந்துள்ளது.
அதிகாரிகள் உடந்தை:
கடந்த 8 ம் தேதி முதல் கறுப்பு பணத்தை வெளிக்கொண்டு வரவும் கள்ள நோட்டுக்களை ஒழிக்கவும் ரூ. 500 மற்றும் ரூ. 1000 நோட்டுக்கள் வாபஸ் பெறப்படுவதாக பிரதமர் மோடி அறிவித்தார். இதனையடுத்து மக்கள் வங்கியில் வரிசையில் நின்று பணத்தை மாற்றி வருகின்றனர். ஏடிஎம் மூலம் பணம் எடுத்து வருகின்றனர். இந்நிலையில், பல கூட்டுறவு வங்கிகள் கறுப்பு பணத்தை மாற்ற உதவுவதாக புகார்கள் எழுந்துள்ளன. கணிணி மயமாகாத கூட்டுறவு வங்கிகளில், நோட்டு புத்தகங்கள் மூலமாகவே கணக்குகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. டிடி மற்றும் பே ஆர்டரையும் இந்த வங்கிகள் முக்கியமாக அரசியல்வாதிகளுக்கு வழங்குவதாக புகார்கள் எழுந்துள்ளன. கூட்டுறவு வங்கிகளில் அரசியல்வாதிகள் தங்களிடமுள்ள கறுப்பு பணத்தை பிக்சட் டெபாசிட்டாக முதலீடு செய்வதாகவும், முன்தேதியிட்ட காசோலையாக வாங்கி கொள்வதாக புகார் எழுந்துள்ளது. இதற்கு அதிகாரிகள் உடந்தையாக இருப்பதாக கூறப்படுகிறது.
எச்சரிக்கை:
இது தொடர்பாக வங்கி அதிகாரிகள் கூறியதாவது: விதிமுறைகளில் உள்ள ஓட்டைகளை பயன்படுத்தி, டிடி மற்றும் பே ஆர்டர்கள் மூலம் கிடைக்கும் பணம், மொத்த வங்கிக்கணக்கிற்கு செல்கிறது. அனைத்து வங்கிகளும், பணத்தை மாற்றவும், முதலீடு செய்யவும் அனுமதிக்கின்றன. ஆனால், இந்த வங்கிகள் கணக்கில் வராத பணத்தை மாற்ற உதவி செய்கின்றன என்றனர். மேலும், கூட்டுறவுவங்கிகளில் டிடி மற்றும் பேர் ஆர்டர்களை வாங்கும் நபர்கள், அதனை மற்ற வங்கிகளில் கொடுத்து பணமாக மாற்ற மாட்டார்கள். பின்னர் அந்த டிடி மற்றும் பே ஆர்டர்களை மார்ச் 31க்கு பிறகு ரத்து செய்துவிட்டு, புதிய நோட்டுக்களாக வழங்க திட்டமிட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
இது குறித்து தகவலறிந்த ரிசர்வ் வங்கி, விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என கூட்டுறவு வங்கிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
English Summary :
In order to uncover black money, have a high monetary value notes were withdrawn, the cooperative banks to transfer the money to help alleged.