புதுடில்லி: சரியான விளக்கம் சொல்லாத, காங்கிரஸ், எம்.பி., ஆனந்த் சர்மா மற்றும் மத்திய அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி ஆகியோரை, ராஜ்யசபா துணைத் தலைவர், பி.ஜே.குரியன் வறுத்தெடுத்தார்.
ராஜ்யசபாவில் நேற்று நடந்த விவாதத்தின்போது, செல்லாத ரூபாய் நோட்டு விவகாரம் தொடர்பாக தாக்கல் செய்த ஒழுங்கு பிரச்னை குறித்து பேசுவதற்கு, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் அமைச்சர் ஆனந்த் சர்மாவுக்கு, சபையின் துணைத் தலைவர், பி.ஜே.குரியன் அனுமதி அளித்தார்.
அப்போது பேசிய ஆனந்த் சர்மா, ''அரசியலமைப்பு சட்டம் மீறப்பட்டுள்ளது,'' என்றார். இதற்கு, ஆளுங்கட்சி தரப்பில் இருந்து கடும் எதிர் கோஷம் எழுப்பப்பட்டது.
அப்போது குறுக்கிட்ட, பா.ஜ.,வைச் சேர்ந்த மத்திய அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி, ''இந்த பிரச்னை குறித்து விவாதிக்க தயாராக உள்ளோம்; ஒழுங்கு பிரச்னை தேவையில்லை,'' என்றார்.
இதனால், கோபமடைந்த குரியன், ''பேசுவதற்கு நான் அனுமதி அளித்துள்ளேன்; அதற்கு பதிலளிக்கலாம்,'' என்றார். ''எந்த விதியின் கீழ் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது,'' என, நக்வி கேள்வி எழுப்பினார்.
இதனால் ஆத்திரமடைந்த, குரியன், ''அமைச்சர் என்று கூட பார்க்க மாட்டேன்; எதிர்த்து பேசினால் நடவடிக்கை எடுக்கப்படும்; பேசாமல், உட்காருங்கள்,'' என, கோபத்துடன் கூறினார்.அதைத் தொடர்ந்து, ஆனந்த் சர்மாவிடம், ''அரசியலமைப்பு சட்டத்தின் எந்தப் பிரிவு மீறப்பட்டுள்ளது,'' என, குரியன் கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளிக்காமல், ஆனந்த் சர்மா தொடர்ந்து பேசினார். ஆனால், தன் கேள்வியை, குரியன் தொடர்ந்து கேட்டார். பதில் கிடைக்காததால், ''ஒழுங்கு பிரச்னை ரத்து செய்யப்படுகிறது; நீங்கள் உட்காருங்கள்,'' என, ஆனந்த் சர்மாவிடம், குரியன் கோபமாக கூறினார்.
English Summary:
Say the correct interpretation, Congress MP and Union Minister Anand Sharma, Minister Mukhtar Abbas Naqvi, Vice Chairman of the Rajya Sabha, PJ roasted