இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்படுகிறது. எம்.எஸ்.கே.பிரசாத் தலைமையிலான தேர்வு குழுவினர் மும்பையில் கூடி அணியை தேர்வு செய்கிறார்கள்.
5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்பதற்காக அலஸ்டயர் குக் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொள்கிறது.
5ம் தேதி மும்பையில் உள்ள சி.சி.ஐ கிளப்பில் பயிற்சி மேற்கொள்ளும் இங்கிலாந்து அணியினர், பிறகு முதலாவது டெஸ்ட் நடக்கும் ராஜ்கோட்டுக்கு செல்வார்கள்.
ராஜ்கோட்டில் நவம்பர் 9 முதல் 13ம் தேதிவரை முதலாவது டெஸ்ட் நடைபெறுகிறது. விசாகப்பட்டினத்தில் நவம்பர் 17-21 வரை 2வது டெஸ்ட் போட்டியும், மொகாலியில் நவம்பர் 26-30 வரை 3வது டெஸ்ட் போட்டியும், மும்பையில் டிசம்பர் 8-12 வரை 4வது டெஸ்ட் போட்டியும் நடைபெறுகிறது. ஐந்தாவது டெஸ்ட் போட்டி சென்னையில் டிசம்பர் 16ம் தேதி முதல் 20வரை நடைபெறுகிறது.
இந்நிலையில், இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்படுகிறது. எம்.எஸ்.கே.பிரசாத் தலைமையிலான தேர்வு குழுவினர் மும்பையில் கூடி அணியை தேர்வு செய்கிறார்கள்.
நியூசிலாந்துக்கு எதிரான தொடரின் போது காயமடைந்த ஓப்பனிங் பேட்ஸ்மேன் லோகேஷ் ராகுல், வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார் ஆகியோர் இன்னும் குணமடையாததால் அவர்களுக்கு வாய்ப்பு கிடைப்பது சந்தேகம்.
விரலில் ஏற்பட்ட காயத்தால் அவதிப்படும் ஷிகர் தவானுக்கும் இடம் கிடைப்பது சந்தேகம் தான். எனவே ஓப்பனிங் இடத்துக்கு முரளி விஜயுடன் கம்பீரை களமிறக்க வாய்ப்பாக அவரை அணிக்கு தேர்ந்தெடுக்க வாய்ப்புள்ளது.
2 ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு இந்தூரில் நடந்த நியூசிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்டில் கம்பீருக்கு களம் காண வாய்ப்பு கிடைத்தது. கம்பீர் 2வது இன்னிங்சில் அரைசதம் அடித்து நம்பிக்கையை காப்பாற்றினார். சில தினங்களுக்கு முன்பு ரஞ்சி கிரிக்கெட்டில் ஒடிசாவுக்கு எதிராக 147 ரன்கள் விளாசி மீண்டும் தனது ஃபார்மை பறைசாற்றியுள்ளார்.
சிக்குன் குனியா காய்ச்சலால் நியூசிலாந்து தொடரில் ஆட முடியாத இஷாந்த் ஷர்மா ,அதில் இருந்து குணமடைந்து ரஞ்சி போட்டியில் விளையாடினார். இதனால் அவருக்கு அணியில் வாய்ப்பு கிடைப்பது உறுதியாகிவிட்டது. அநேகமாக நியூசிலாந்து தொடரில் விளையாடிய இந்திய அணியில் எந்த மாற்றமும் இருக்காது.
Wednesday, 2 November 2016
Home »
» இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி இன்று தேர்வு.. கம்பீருக்கு கிடைக்குமா வாய்ப்பு?
இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி இன்று தேர்வு.. கம்பீருக்கு கிடைக்குமா வாய்ப்பு?
Location:
Delhi, India