தமிழக முதல்வர் ஜெயலலிதா பூரண உடல்நலம் பெறவேண்டி தமிழகத்தில் பல்வேறு கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன.
திருவாரூர் மாவட்டம் அவளிவணல்லூர் சாட்சிநாதசாமி கோயிலில் 13 வகையான யாகங்கள் நடத்தப்பட்டு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது. அதன்பின் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் அதிமுக உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
ராமநாதபுரம் திருஉத்திரகோசமங்கை மங்களநாதர் கோவிலில் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்காக ஹோமங்கள் மற்றும் யாகசாலை பூஜைகள் உள்ளிட்ட சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. இதில் அதிமுகவினர் பலர் கலந்து கொண்டனர்.
தருமபுரி மாவட்டம் அரூர் வருணீஸ்வரர் கோவிலில் ஸ்ரீ மகாகணபதி ஹோமம், ஆயுஸ் ஹோமம், உள்ளிட்ட சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. இதில் அதிமுகவினர் பலர் கலந்து கொண்டனர்.
தமிழக முதல்வர் ஜெயலலிதா பூரண குணமடைந்து வீடு திரும்ப வேண்டியும், அவர் நீண்ட ஆயுள் பெற வேண்டியும் புதுக்கோட்டை மாவட்ட அதிமுக சார்பில் திருவேங்கை வாசலில் உள்ள தட்சிணாமூர்த்தி சன்னதியில் ஆயுஷ் ஹோமம், மிருத்தஞ்யங் ஹோமம் உள்ளிட்டவை நடைபெற்றன. 108 நறுமணப் பொருட்களைக் கொண்டு யாகம் நடத்தப்பட்டது. தமிழக முதல்வர் பூரண உடல்நலத்துடன் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்ப வேண்டி திருவள்ளூர் மாவட்டம் பஞ்செட்டியில் அமைந்துள்ள அருள்மிகு ஆனந்தவல்லி அம்பிகை சமேத அகதீஸ்வரர் திருக்கோவிலில் ஆயுஷ் ஹோமம் உள்ளிட்ட சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன. ஊரக தொழில்துறை அமைச்சர் பெஞ்சமின் உள்ளிட்டோர் இந்த வழிபாட்டில் கலந்துகொண்டனர்.
திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவிலில் பிரத்யாங்கர யாகம் நடைபெற்றது. முன்னதாக அபிராமி அம்பிகை, பத்மகீரிஸ்வரருக்கு முதல்வர் ஜெயலலிதா பெயரில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. இந்ந நிகழ்ச்சியில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் உள்பட அதிமுகவினர் பலர் பங்கேற்றனர்.
English Summary:
Tamil Nadu Chief Minister Jayalalithaa, special pujas were held at various temples in the state to be in perfect health.