புதுடில்லி: மத்திய அரசு கொண்டு வந்த ரூபாய் நோட்டு விவகாரம் தொடர்பாக பார்லி.,யில் எதிர்கட்சியினர் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதனால் ராஜ்யசபா துவங்கியதும் 12 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டது.கடந்த 8ம் தேதி 500, 1000 நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி அறிவித்தார். இந்த அறிவிப்பை தொடர்ந்து ஏ.டி.எம்,.கள் மூடப்பட்டன. வங்களில் பணம் எடுக்க முடியாமல் போட முடியாமல் பலர் தவித்தனர். கறுப்பு பணத்தை ஒழிக்க மக்கள் ஆதரவு அளிக்க வேண்டும் என பிரதமர் கேட்டு கொண்டார். கறுப்பு பண முதலைகள் பெரும் கவலையில் ஆழ்ந்தன. மேலும் காங் கட்சியினர் மற்றும் மேற்கு வங்க முதல்வர் மம்தா, உ பி., முதல்வர் அகிலேஷ், டில்லி முதல்வர் கெஜ்ரிவால், திமுக மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர் கண்டனம் தெரிவித்தனர்.
அமளி:
இந்நிலையில் பார்லி., குளிர்கால கூட்டத்தொடர் துவங்கியுள்ளது. 2வது நாளான இன்று
கேள்வி நேரத்தை ஒத்திவைத்து பண விவகாரம் தொடர்பாக விவாதிக்க வேண்டும் என எதிர்கட்சியினர் நோட்டீஸ் வழங்கினர். தொடர்ந்து அவையில் கூச்சலிட்டனர். தமிழகத்தை சேர்ந்த அதிமுக உறுப்பினர்களும் காவிரி மேலாண் வாரியம் குறித்து குரல் கொடுத்தனர். இதனால் ராஜ்யசபா 12 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டது. தொடர்ந்து கூடியதும் அமளி தொடர்ந்ததால் அவை 2வது முறை தலைவர் அன்சாரி ஒத்தி வைத்தார்.
லோக்சபாவில் எதிர்கட்சியினர் குரல் எழுப்பியவாறு இருந்தனர். ஆனாலும் சபாநாயகர் கேள்வி நேரத்தை ஒத்தி வைக்கவில்லை. பண பரிமாற்றம் தொடர்பாக மத்திய அரசு அறிவித்த திட்டத்தால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு பிரதமர் விளக்கம் அளிக்க வேண்டும் என கோரினர்.
சபாநாயகர் மறுப்பு :
ராஜ்யசபாவில் எதிர்கட்சியினர் உறுப்பினர் எண்ணிக்கை அதிகம் இருப்பதால் அவையை தொடர்ந்து
நடத்த முடியவில்லை. லோக்சபாவில் எதிர்கட்சியினர் உறுப்பினர் குறைவாக இருப்பதால் சபாநாயகர் சுமித்ரா மகாஜன் அவையை ஒத்தி வைக்க மறுத்து விட்டார். உறுப்பினர்கள் கேள்வி நேரத்தில் மாற்றமில்லை என தெரிவித்தார். லோக்சபா கூச்சல் இடையே பணி தொடர்ந்து நடந்தது. தொடர்ந்து காங்சிரஸ் கட்சியின் சபை தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே பேசுகையில் பண பரிமாற்றம் தொடர்பாக ஓட்டெடுப்புடன் கூடிய விவாதத்திற்கு வழி செய்ய வேண்டும் என கேட்டார். ஆனால் சபாநாயகர் மறுத்து விட்டார். இதனையடுத்து எழுந்த அமளியால் லோக்சபா 12.30 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டது. பின்னர் கூடியதும் அவையில் கூச்சல் எழுந்தது. இதனால் அவையை நாள் முழுவதும் ஒத்தி வைப்பதாக சபாநாயகர் சுமித்ரா மகாஜன் அறிவித்தார்.
English Summary:
The government came up with the issue of bill barley., Took part in the opposition and Sabha.
Thus begins the Rajya Sabha adjourned till 12 o'clock on the 8th annoncement about 500 and 1000 notes that the Prime Minister declared void. The Prime Minister was asked whether people should support the abolition of black money.