புதுடில்லி: ஏழைகளுக்காக மத்திய அரசு ஆட்சியில் உள்ளதாக பிரதமர் மோடி பேசியுள்ளார்.
பா.ஜ., பார்லிமென்டரி எம்.பி.,க்கள் கூட்டம் இன்று நடந்தது. பிரதமர் மோடி மற்றும் மூத்த தலைவர்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
துவக்கம்:
கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது: கறுப்பு பணத்தால் ஏழை மக்கள் அவதிப்படுகின்றனர். நாம் ஏழைகளுக்காக ஆட்சியில் உள்ளோம். ரூபாய் நோட்டு வாபஸ் முடிவு அல்ல. கறுப்பு பணத்திற்கு எதிரான நமது பெரிய போராட்டத்தின் துவக்கம். ரூபாய் நோட்டு வாபஸ் விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் மக்கள் மத்தியில் பொய் சொல்கின்றன. இந்த திட்டத்தால் ஏற்படும் நன்மைகள் பற்றி எம்.பி.,க்கள் மக்களிடம் எடுத்து சொல்ல வேண்டும். என்றார்.
நாட்டு நலனுக்காக:
பின்னர் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி பேசியதாவது: ரூபாய் நோட்டு வாபஸ் விவகாரத்தை அனைத்து மக்களும் வரவேற்கின்றனர். இது வரலாற்று சிறப்பு மிக்க நடவடிக்கை நாட்டிற்கு நீண்ட காலம் பலனளிக்கும். சிலர் இந்த நடவடிக்கை நிதியமைச்சருக்கு தெரியாது என்கின்றனர். ஆனால், அவர்கள் பா.ஜ.,வுக்கு முன்னரே தெரியும் என கூறுகின்றனர். கடந்த 70 ஆண்டுகளாக கடைபிடிக்கப்பட்டு வந்த வழக்கமான நடவடிக்கைக்கு பிரதமர் முடித்துவைத்து, புதிய வழக்கத்தை பிரதமர் துவக்கிவைத்துள்ளார்.
இந்த நடவடிக்கை குறித்து விவாதிக்க தயாராக உள்ளோம். இதனை பல முறை கூறிவிட்டோம். ரூபாய் நோட்டு வாபஸ் முடிவு மிகப்பெரிய முடிவு. அரசுக்கு நிறையஊக்கம் தேவை. வறுமையை ஒழிக்க ரூபாய் நோட்டு வாபஸ் உதவும். நாட்டு நலனுக்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையை ரகசியமாக வைப்பது கடினமாக இருந்தது. இந்த முடிவால், டிஜிட்டல் பொருளாதாரம் வளரும் என்றார்.
இதன் பின்னர் ரூபாய் நோட்டு வாபஸ் பெற்ற மத்திய அரசின் முடிவுக்கு ஆதரவாக ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
English Summary:
Modi has spoken out for the poor, the federal government is in power. BJP Parliamentary MPs meeting took place today. Prime Minister Modi and other senior leaders attended the meeting.