ஈரோடு: ஈரோடு அருகே மஞ்சள் பயிர் கருகியதால் மனமுடைந்த விவசாயி ஒருவர் பூச்சி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கரட்டுப்பாளையத்தை சேர்ந்த ராமலிங்கம் என்பவர் இந்த முடிவவை தழுவியவர்.3.5 ஏக்கரில் சாகுபடி செய்த மஞ்சள் பயிர் முழுவதும் தண்ணீர் இல்லாமல் கருகியதால் மனமுடைந்த அவர் பூச்சி மருந்தை குடித்துள்ளார். கொடுமுடி மருத்துவமனையில சேர்க்கப்படட ராமலிங்கம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதனிடையே காலிங்கராயன் பாசன வாய்க்காலில் தேவையான தண்ணீரைவிட்டு மஞ்சள் சாகுபடி விவசாய்களை பாதுகாக்க அரசு முன்வரவேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது. ஈரோடு காலிங்கராயன் பாசன வாயிகள் மூலம் நேரடியாகவும் மறைமுகமாகவும் சுமார் 25 ஆயிரம் ஏக்கர் பாசன வசதி பெற்று வருகிறது. அதில் ஆண்டுதோறும் 10 மாதம் வரை தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் இந்த ஆண்டு வெறும் 28 நாட்கள் மட்டுமே தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் விவசாயிகள் உச்சக்கட்ட பாதிப்புக்கு தள்ளப்பட்டனர்.