புதுடில்லி:'கறுப்பு பணத்துக்கு எதிரான அறப்போரை துவங்கியுள்ளோம்; அதன்படியே, 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டது. இதில் அனைத்து கட்சிகளும் அரசுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும்' என, அனைத்துக் கட்சி கூட்டத்தில், பிரதமர் மோடி கூறியுள்ளார்.
பார்லிமென்ட் குளிர்கால கூட்டத் தொடர் இன்று துவங்குகிறது. இது தொடர்பாக அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்திருந்தார்.
'கறுப்பு பணம்மற்றும் ஊழலுக்கு எதிராக, மத்திய அரசு அறப்போரை நடத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக, 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப் பட்டுள்ளது.
பயங்கரவாதத்துக்கு எதிரான இந்நடவடிக்கையில், அனைத்துக் கட்சிகளும் அரசுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும்' என, மோடி வேண்டுகோள் விடுத்துள்ளதாக தெரிகிறது.
மேலும், பார்லிமென்ட் மற்றும் சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது குறித்து விவாதிக்க வேண்டும் என்றும் அவர்
வலியுறுத்தியுள்ளார். கடந்த பார்லி., கூட்டத் தொடரில், ஜி.எஸ்.டி., மசோதாவுக்கு அனைத்து கட்சிகளும் ஆதரவு அளித்ததை நினைவு கூர்ந்த அவர், எந்தப் பிரச்னை குறித்தும் விவாதிக்க அரசு தயாராக உள்ளதாக கூறியுள்ளார்.