சென்னை: தி.மு.க., தலைமை கழக முதன்மை செயலாளரும், முன்னாள் தமிழக அமைச்சருமான துரைமுருகன் உடல் நலம் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
முன்னாள் அமைச்சர் துரைமுருகன் சென்னை விமான நிலையத்தில் மயங்கி விழுந்தார். உடன் இருந்தவர்கள் அவரை சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதே மருத்துவமனையில் தான் தமிழக முதல்வர் ஜெயலலிதாவும் சிகிச்சை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.