புதுடில்லி: இந்திய கரன்சிகளில் அதிரடி மாற்றம் கொண்டு வந்ததால் அதிர்ச்சியுற்ற எதிர்கட்சியினர் இன்று ஒரு சேர முக்கிய ஆலோசனை கூட்டம் நடத்துகிறது. இந்த கூட்டத்தில் பங்கேற்க மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி இன்று டில்லி வருகிறார்.
கடந்த 8 ம் தேதி 500, 1000 ரூபாய் நோட்டு செல்லாது என அறிவித்ததால் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கறுப்பு பண ஒழிப்பில் மக்கள் ஆதரவு அளிக்க வேண்டும் என கேட்டு கொண்டார்.
இந்நிலையில் எதிர்கட்சியினர் எடுக்க வேண்டிய நிலை குறித்து ஆலோசிக்கவுள்ளனர். காங்., திரிணாமுல் காங்., ஜே.எம்.எம்., சி.பி.ஐ.,, சி.பி.எம்., ஆர்.ஜே.டி., ஜேடியு., உள்ளிட்ட எதிர்கட்சி பிரமுகர்கள் பங்கேற்கின்றனர். இந்த கூட்டத்தில் இன்று பேரணி நடத்துவது குறித்து முடிவு செய்யப்படும் என தெரிகிறது.
நாளை பார்லி., கூட்டம் :
முன்னதாக காலை 10 மணிக்கு காங்கிரஸ் கட்சியின் முக்கிய கூட்டம் நடக்கிறது. மதியம் 2 மணிக்கு அனைத்து கட்சியினர் கூடி ஆலோசனை நடத்துகின்றனர். மாலை 4 மணியளவில் பிரதமர் மோடி அனைத்து கட்சியினரை அழைத்துள்ளார். இதில் நாளை நடக்கவிருக்கும் பார்லி., கூட்டத்திற்கு ஒத்துழைப்பு தருமாறு கேட்டு கொள்கிறார்.