ஹைதராபாத்: பிரதமரின் பாதுகாப்பு பணிக்கு சென்ற போலீஸ் எஸ்.ஐ. துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஹைதராபாத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஹைதராபாத்தில் நேற்றும் இன்றும் நடைபெற்றுவரும் அனைத்து மாநில போலீஸ் ஐ.ஜி. மற்றும் டி.ஜி.பி.க்கள் மாநாட்டில் பங்கேற்பதற்காக பங்கேற்பதற்காக இந்நகருக்கு வந்துள்ளார் பிரதமர் மோடி. இவரின் பாதுகாப்பு ஏற்பாடுகளை கவனிக்க தெலுங்கானா மாநிலம், ஆசிபாபாத் போலீஸ் நிலையத்தில் பணியாற்றிவந்த ஸ்ரீதர் என்ற சப்-இன்ஸ்பெக்டரும் நியமிக்கப்பட்டிருந்தார்.
பாதுகாப்பு பணிக்காக, ஹைதராபாத்தின் உப்பராப்பள்ளி பகுதிக்கு வந்த ஸ்ரீதர் திடீரென தனது ரிவால்வரால் தன்னைத்தானே, துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டார்.
குடும்பப் பிரச்சனை காரணமாக இந்த முடிவை அவர் தேர்ந்தெடுத்திருக்கலாம் என ராஜேந்திரா நகர் போலீசார் கூறுகிறார்கள். இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
English summary:
A Sub-Inspector committed suicide by firing his service revolver in Hyderabad on Saturday morning.