மதுரை:
"தமிழகத்தில் இந்தாண்டு ஜல்லிக்கட்டு நடக்காவிட்டால் தி.மு.க., சார்பில் மதுரையில் போராட்டம் நடத்தப்படும்," என அக்கட்சி பொருளாளர் ஸ்டாலின் நேற்று மீண்டும் அறிவித்தார்.மதுரை திருப்பரங்குன்றம் வேட்பாளர் சரவணனை ஆதரித்து வலையங்குளத்தில் பிரசாரம் துவக்கி அவர் பேசியதாவது:முதல்வர் ஜெயலலிதா முழு உணர்வுடன் அறிக்கையை வெளியிட்டாரா என சந்தேகம் ஏற்பட்டுள்ளது. 'கைரேகை' குறித்தும் அதே சந்தேகம் உள்ளது. உண்மை விரைவில் வெளியாகும்.தமிழகத்தில் கண்டெய்னர்களில் கொண்டு செல்லப்பட்ட 570 கோடி ரூபாய் தொடர்பாகவும், அமைச்சர்கள் தொடர்பையும் வெளிக்கொண்டு வரவேண்டும். ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நிலையில் சென்னையில் இருந்து டெல்டா பகுதிக்கு கண்டெய்னரில் பணம், வைரம், தங்க நகைகளை போலீசார் உதவியுடன் கடத்தப்பட்ட தகவல் குறித்தும் விசாரிக்க வேண்டும்.மத்திய அரசின் குளிர்கால கூட்டத்தொடரில் விவாதிக்க வேண்டிய பொருட்களில், ஜல்லிக்கட்டு தொடர்பான விவாதம் இடம் பெறவில்லை. இதனால் இந்தாண்டும் ஜல்லிக்கட்டு நடப்பது சந்தேகம்தான். முதல்வர் ஜெயலலிதா கொண்டு வந்த 'தமிழ்நாடு உயர்நீதி மன்றம்' என்ற பெயர் மாற்றம் தீர்மானத்தையும் மத்திய அரசு நிராகரித்து விட்டது. இவை குறித்து தமிழக அரசு கவலைப்பட்டதாக தெரியவில்லை.
ஜல்லிக்கட்டு போராட்டம் ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட நிலையில், பா.ஜ., கேட்டுக்கொண்டதால் நிறுத்தி வைக்கப்பட்டது. மத்திய, மாநில அரசுகளை கண்டித்து அப்போராட்டம் மீண்டும் நடத்தப்படும், என்றார்.